ஜனவரி 26, 2015

குறளின் குரல் - 1012

26th Jan 2015

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
                                    (குறள் 1006: நன்றியில்செல்வம் அதிகாரம்)

ஏதம் - நோயே, குற்றம், பெரும் பாவம் என்று பலவாறாகப் பொருள் கொள்ளலாம்.
பெருஞ் செல்வம் - தேடி வைத்த பெருஞ் செல்வமும்
தான் துவ்வான் - தானும் துய்க்கமாட்டான்
தக்கார்க்கு - உதவி வேண்டி வாடியிருப்போர்க்கு
ஒன்று ஈதல் - ஏதேனும் ஈந்து உதவி செய்கின்ற
இயல்பிலாதான் - இயல்பும் இல்லாதவனுக்கு

சென்ற குறளின் கருத்தாக பயன் என்ன என்று கேட்டதையே இக்குறளில் இன்னும் வலிமையாக தகுதியுடையார்க்கு, உதவி வேண்டியிருப்போர்க்கு ஈதலும், தாமும் துய்த்தலும் இல்லார்க்கு அவர் சேர்த்துவைத்த பெருஞ்செல்வமும் நோயே என்று கூறுகிறார் வள்ளுவர்.

ஒருவன் சேர்த்துவைத்த செல்வத்தை தமக்கும் தம்மனோர்க்கும் செலவு செய்வானேயானால் அவனுடைய செல்வம் சேர்த்த உழைப்புக்குப் பயனை ஓரளவேனும், இம்மையில் தருகிறது.  ஈந்து உவத்தலே இனிமையும் மறுமைக்குப் பயன் தருவதுமாம். அவ்வாறு சேர்த்த செல்வத்தை தகுந்தவர்க்கு ஈந்து   உவக்காதார்க்கு அச்செல்வத்தைக் காக்கின்ற கவலையே நோயாக மாறிவிடும். ஈயார் தேட்டை தீயார் கொள்வரன்றோ?

Transliteration:

Edam perunjchelvam thAnthuvvAn thAkkArkonRu
Idal iyalbilA dAn

Edam – Is a disease, infact even a crime and a grievous sin
Perunj chelvam – what one has amassed
thAn thuvvAn – never enjoys himself for his people
thAkkArkku – for those needy
onRu Idal – to show benevolence
iyalbilA dAn - not having in his nature.

Earlier verse had asked a general question as to what would be the use of accumulated wealth if somebody is neither enjoying it himself nor doing anything to the needy with it. This verse goes a step further and says, it is indeed a disease to have such wealth without the above said two uses.

If a person spends on himself and his people, he has enjoyed the fruits of his labor in this birth itself, which adds some meaning in the present birth. Like wise, being benovelnt has its own happiness - to see the smile in the needy being helped and gives an assurance of noble birth in subsequent births. Even the worry of protecting the wealth could become a disease for the person who owns and does not share. After all, unshared wealth can become the target of evil and that is a true worry.

It is nothing but disease to accumulate all that wealth
When neither enjoy it self nor show benovelence with”


இன்றெனது குறள்:

தேடிவைத்த கோடிகளும் கூடியநோய் துய்த்தலோ
வாடினார்க்கு ஈதலோசெய் யார்க்கு

thEDivaiththa kODikaLum kUDiyanOi thuyththalO
vADinArkku IdalOsei yArkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...