24th
Jan 2015
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
(குறள் 1004:
நன்றியில்செல்வம் அதிகாரம்)
எச்சமென்று - தான் விட்டுச் செல்வதாக
என் எண்ணுங் கொல்லோ - எதை நினைப்பார்
ஒருவரால் - பிறரால்
நச்சப்படாஅதவன் - விரும்பப்படாதவன் (செல்வமிருந்தும் அதனால்
பிறர்க்குப் பயனாயிராதவன்)
பரிமேலழகர் உரையில் எச்சம் என்பதற்கு பொருளாக “இறந்தவழி ஈண்டு
ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?” என்று வினவுவார். காளிங்கர் உரை சற்றி விரிவாக
எச்சம் என்பதனை, “குலமும், உருவும், குணமும், ஒழுக்கமும், மக்களும், பொருளும், நிலமும்”
என்று கூறியிருப்பார்.
எவ்வாறாயினும் இக்குறள் கேட்பது, ஒருவர் தன்னுடைய காலத்துக்குப்
பின் எதை விட்டுச் செல்வார், அவர் வாழும் காலத்தே யாராலும் விரும்பப்படாராயின்? ஒருவர்
ஏன் விரும்பப் படாதவர் ஆகிறார். அவரிடம் பிறரோடு பகிர்ந்து கொள்ள, தம்மோடு பிறருக்கும்
பயனாகக் கூடிய செல்வமிருந்தும், அவ்வாறு செய்யாராயின், அவருக்கு புகழ் என்று ஒன்று
வாழும் காலத்து இருக்கப்போவதில்லை. ஒருவரும் அவரை அண்டப்போவதுமில்லை. அவ்வாறிருக்க,
அவர் மாண்டபின் அவர் தம்முடைய அடையாளம் என்று விட்டுச் செல்வது யாது? இது இவருடையது
என்று மக்கள் வியந்து, பாராட்டிப் பேச, மேற்சொன்ன எவ்வெச்சங்களுமே இல்லை என்பதே இக்குறளின்
கருத்து.
Transliteration:
echchamenRu
eneNNung kollO oruvarAl
nachchap
paDAa divan
echchamenRu
– legacy
en
eNNung kollO - what do they think that they leave as (their legacy)
oruvarAl
– by someone
nachchappaDAadivan
– not desired
Parimelazhagar interprets the word “echcham” as “when
dead, what would be considered as remaining for a person?”. But kALingar
explains it better as any or all of the
following: lineage, form, virtue, discipline, progeny, possessions and the
property – which is more explicit.
Regardless of how the interpretation is, this verse asks,
what will a person leave behind as his stamp of legacy, if he was disliked by
everyone while he was alive. Why is a person not liked? A person having the ample
wealth to share and be useful to others, if acts miserly, is not going to gain any
glory in his life time, and none would even approach his for anything. How then
would he be able to leave anything as his legacy, except his miserly
infamy. The verse implies for such
person there is nothing that anyone would remember with pride and gratitude of
him.
“What
could be there as someone’s legacy to remember with gratitude?
When that person has lived a life of a miser
and never was truly liked
இன்றெனது
குறள்(கள்):
கஞ்சனென்று யாவரும் அஞ்சி வெறுத்தார்க்கு
விஞ்சிநிற்றல் என்பது யாது?
kanjanenRu
yAvarum anji veRuththArkku
vinjiniRRal
enbadu yAdu?
யாவர்க்கும்
வேண்டாராம் ஈயார்க்கு இவ்வுலகில்
ஆவதென் ஆயுள்
முடிந்து?
yAvarkkum
vENDArAm IyArkku ivvulagil
Avaden
AyuL muDindu?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam