ஜனவரி 22, 2015

குறளின் குரல் - 1009

23rd Jan 2015

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
                                    (குறள் 1003: நன்றியில்செல்வம் அதிகாரம்)

ஈட்டம் - செல்வம் சேர்ப்பது மட்டும்
இவறி - விழைந்து
இசைவேண்டா ஆடவர் - புகழீட்ட விழையா ஆடவர்
தோற்றம் - உருவம்
நிலக்குப் - இந்த பூமிக்கு
பொறை - பாரமானவொன்றாகும்

செல்வம் ஈட்டுதலை மட்டும் குறியாகக் கொண்டு, கிடைத்தற்கரிய புகழை ஈட்டுவதில் நாட்டமில்லாதவர்களின் உருவம் இப்பூமிக்கு பெரும் சுமையாகும். அவர்கள் ஈட்டிய செல்வம், நற்செயல்களில் பயனாகி, ஒருவருக்கு இசைதரும் வாழ்வைத் தரவில்லையென்றால், அவர்களின் தோற்றம் இவ்வுலகுக்கு சுமை மட்டும்தான்.

Transliteration:

ITTam ivaRi isaivENDA ADavar
thORRam nilakkup poRai

ITTam – wealth
ivaRi – lusting to accumulate (wealth)
isaivENDA ADavar – men that do not use it usefully to earn glory
thORRam – their form
nilakkup for this earth
poRai – nothing but a burden
Men lusting to amass wealth, not seeking lasting glory, are nothing but a burdent to this earth. The purpose of earning is to share it for the benefit of larger society. Men that lack such virtue of benevolence or purpose of life with earned wealth are definitely a big burden to the society .

“Not desiring lasting glory, but only lust for wealth,
 men of such pursuit are in form, a burden to earth”


இன்றெனது குறள்:

ஆக்கம் விழைவார் அரும்புகழ் வேண்டாதார்
நோக்கின் சுமையாம்பூ மிக்கு

Akkam vizhaivAr arumpugazh vENDAdAr
nOkkin sumaiyAmpU mikku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...