ஜனவரி 22, 2015

குறளின் குரல் - 1008

22nd Jan 2015

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
                                    (குறள் 1002: நன்றியில்செல்வம் அதிகாரம்)

பொருளானாம் எல்லாமென்று - செல்வத்தால் எல்லாம் ஆகும் என்று இறுமாந்து, ஈட்டியதை
ஈயாது - ஒருவருக்கும் கொடாது
இவறும் - தம் செல்வத்தை இறுகப் பற்றிய
மருளானாம் - அறிவு மயக்கத்தில் உள்ளோர்க்கு
மாணாப் பிறப்பு - வரும் பிறவி என்பது மாட்சிமை இல்லாத கீழ் பிறப்பேயாகும்

மாணாப் பிறப்பு என்பதை நிறைதல் இல்லாத பேய்ப் பிறப்பு என்பார் பரிமேலழகர். தமக்கு வந்து சேர்ந்த செல்வத்தால் அல்லது தாம் ஈட்டிய செல்வத்தால் எல்லாவற்றையும் அடைய முடியும் என்று இறுமாந்து, பிறர்க்கு சற்றும் ஈந்து உவக்காமல், இறுகப் பற்றி செல்வத்தைப் பூட்டி வைக்கும் அறிவு மயக்கத்தில் உள்ளோர்க்கு, மீண்டும் கருவறையில் உழண்டு பிறக்கும் விதியுண்டு, அதுவும் மாட்சிமை இல்லாத ஈனப் பிறவியே என்கிறது இக்குறள்.

அறத்துப்பாலின் மெய்யுணர்தல் அதிகாரத்தின் முதற் குறள் இக்குறளின் ஈற்றடியே கொண்டது. அக்குறளின் பொருளையும் இக்குறளோடு பொருத்திப் பார்த்தாலும், பொருந்தி வருகிறது. நிலையற்ற பொருளை பொருட்டாகக் கொண்டு அவற்றைப் பேணிக் காக்கு மருள் நோக்கினர்க்கு மாட்சியுள்ள பிறவி கிடையாது என்பதே அக்குறள் கூறுவதும். ஆயினும் அக்குறளில் மெய்ப்பொருள் அல்லாதவை என்று ஒருவனுக்கு உடமைகளாக இருக்கக்கூடிய அனைத்தையும் (மக்கள், நட்பு, சுற்றம், செல்வம், உண்டி, ஆபரணங்கள்) அத்துணையும் குறிக்கப்படும்.

Transliteration:

poruLAnAm ellAmenRu IyAdu ivaRum
maruLAnAm mANAp piRappu

poruLAnAm ellAmenRu – Thinking out of haughtiness that wealth can accomplish everything,
IyAdu – not giving to or sharing with others, all that a person has inherited or earned
ivaRum – holding on to the valut so tightly (figuratively)
maruLAnAm – blinded brain
mANAp piRappu – will be born lowly in ensuing births

Parimelazhagar interpretes the phrase mANA piRappu as a birth as demon. One who is arrogant because of his inherited or earned wealth and thinks that he can accomplish everything by wealth, and does not share with or give to others, are in blinded state of mind and shall be born a lowly birth only in ensuing births – says this verse.

We have already seen earlier in the canto of virtuous traits (verse 351), the same last line implying a similar meaning. There the word poruL was generalistic in nature implying all that one can possess viz., progeny, friends, relatives, wealth, food and other possessions such as jewels, house etc. But the meaning is similar to this verse, which mainly focuses on inherited/earned wealth.

Haughtiness that wealth can accomplish everything, not sharing
 his wealth with others, a person will only be born as a lowly being


இன்றெனது குறள்:

செல்வத்தால் யாதுமாகும் என்றிறுகப் பற்றியீயாப்
புல்லியர்க் கில்லைமாண்பி றப்பு

selvththAl yAdumAgum enRiRugap paRRiyIyAp
pulliyark killaimANpi Rappu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...