101: (Futile wealth - நன்றியில் செல்வம்)
[As seen in the last verse of the previous chapter, wealth in
any form, in the hands of characterless, virtueless miserly person, is of use
to none. Only when the wealth, whether earned or inherited, is put to use for
general good of the society at large, to help others, it is useful. Else its
existence is considered futile, useless.]
21st
Jan 2015
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
(குறள் 1001:
நன்றியில்செல்வம் அதிகாரம்)
வைத்தான் - கொண்டுள்ளான்
வாய் சான்ற - தன் வீடு கொள்ளும் அளவுக்கு
பெரும்பொருள் - பெருஞ் செல்வத்தினை
அஃதுண்ணான் - இருந்தும் அதைக்கொண்டு அனுபவிக்கத் தெரியாதவன்
செத்தான் - இறந்தவனுக்கு ஒப்பு
செயக் கிடந்தது இல் - அவனால் அச்செல்வத்தைக் கொண்டு
செய்ய கூடியது ஒன்றுமில்லை
தன் வீடு கொள்ளும் அளவுக்கு பெருஞ் செல்வத்தினை ஒருவன்
கொண்டிருந்தாலும், அதை வைத்து வாழ்வை நுகராதவன், இருந்தும் இறந்தவனுக்கே ஒப்பாவான்.
அவனால் அச்செல்வத்தைக் கொண்டு செய்யக்கூடிய பயனுள்ளவை ஏதுமில்லை.
கி.வா.ஜ-வின் ஆய்வுப்
பதிப்பிலே நாலடியார் பாடலொன்றும், பழமொழிப் பாடல்கள் இரண்டும் இக்குறளின் முற்றுக்
கருத்தையும் கூறுவதாக மேற்கோள் காட்டியிருக்கிறார்.
கொடுத்தலும்
துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான்
பெற்ற பெருஞ்செல்வம் - இல்லத்து
உருவுடைக் கன்னியரைப்
போலப் பருவத்தால்
ஏதிலான் துய்க்கப்
படும்.
பிறர்க்குத் கொடுப்பதையும்,
தான் அனுபவிப்பதையும் அறியாத உலோப குணமுடையவன் அடைந்த பெரும் செல்வமானது, வீட்டில்
பிறந்த அழகிய கன்னிப் பெண்களைப் பருவ காலத்தில் பிறர் அனுபவிப்பது போல, அயலானால் அனுபவிக்கப்படும்.
அதாவது கஞ்சனின்
செல்வத்தை அயலாரே அனுபவிப்பர்.
இப்பாடல் சொல்லும் கருத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உவமை நயக்குறைவாகவும், ஓரளவில்
முகத்தைச் சுளிக்கச் செய்வதாயும் உள்ளது, ஒரு வீட்டில் பிறந்த பெண்ணை பிறர் வீட்டுக்கு
மணமுடித்து அனுப்பவது உலக வழக்கு. கன்னித்தன்மை நீங்குவதும் திருமண உறவில் ஒர் அங்கம்.
இதைவிட, “ஈயார் தேட்டை தீயார் கொள்வர்” என்னும் பொருள் பட எழுதியிருக்கலாம்.
முழங்குகின்ற அருவிகளையுடைய,
மூங்கில் முதிர்ந்து முத்துக்களைக்கொட்டுகின்ற மலையை யுடையவனே!, பிறர்க்கீதலும், தான்
அடைதலும் முதலியன அறியாதவன் கொண்டிருக்கின்ற முழக்குகின்ற முரசினை உடைய செல்வம், நாய்பெற்ற
தேங்காயை அஃது ஒக்குமல்லவா? என்கிறது பழமொழிப்பாடல். அதாவது நாய்க்குக் கிடைத்த தேங்காயை
அது உருட்டிக் கொண்டே அலையும்; தாமாக உடைத்துத் தின்னவும் அறியாது, பிறர் எடுத்துக்கொள்ளவும்
அனுமதிக்காது. அப்பாடல்.
வழங்கலும் துய்த்தலும்
தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச்
செல்வம், - தழங்கருவி
வேய்முற்றி
முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம்
பழம்.
Transliteration:
vaiththAnvAi
chAnRa perumporuL ahduNNAn
seththAn
seyakkiDandadu il.
vaiththAn -
having
vAi
chAnRa – house full of
perumporuL –
immense wealth
ahduNNAn –
despite that does not enjoy life with that wealth
seththAn –
is like a dead person
seyakkiDandadu
il – there is nothing he can do useful with that
wealth
Even with immense wealth that fills his house, a
person that cannot enjoy his life using that, is comparable to a dead person, a
corpse. There is none useful that he can do with his wealth.
kI.vA.jAs
research compilation work cites works of nAlaDiyAr and Pazhamozhi to emphasize
the point of this verse. The pazhamozhi poem compares the futile wealth of a
miser to the coconut fruit that a dog gets hold off. It neither knows how to
break and eat it nor allows others to take it.
A nAlaDiyAr
poem says, a misers’ wealth shall be enjoyed only by others like a how a
beautiful virgin girl grown in a household, will be enjoyed by someone outside
that house. This comparison sounds perverse and distasteful, especially because
it is presumably comes from a group of Jain saints. After all girls of one
family will be married off to suitable boys of other families. It is not same
as “misers’s accumulated will go waste with consumption by evil”.
Having
a housefull of wealth not putting it to good use
The
misers’ wealth is futile and he is none but a corpse
இன்றெனது
குறள்:
வீடுகொள்ளச்
செல்வமிக்கும் வைத்துண்ணாக் கஞ்சனிடு
காடுவைத்த
வெற்றுடலே யாம்
vIDukoLLAch chelvamikkum vaiththuNAk kanjaniDu
kAduvaiththa veRRudalE yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam