செப்டம்பர் 27, 2014

குறளின் குரல் - 891

27th Sep 2014

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
                        (குறள் 885: உட்பகை அதிகாரம்)

உறல்முறையான் - உறவினர்களிடையே
உட்பகை தோன்றின் - ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளுகின்ற அளவுக்கு உட்பகை உருவாகுமானால்
இறல்முறையான் - அது அவர்கள் எல்லோருமே இறந்து அழிகின்ற
ஏதம் பலவும் - குற்றங்கள் பலவற்றை
தரும் - உண்டாக்கித் தந்துவிடும்.

உறவினர்களிடைய ஒருவரை ஒருவர் வஞ்சமாக அழித்துக்கொள்ளும்படியான உட்பகை உருவாகுமேயானால்,  அது, அவர்கள் எல்லோருமே அழிந்து, இறக்கும்படியான குற்றங்கள் பலவும் நிரம்பிய வாழ்வையே தரும். “இந்தியத் தவளைகள்” என்று சொல்லக்கூடிய கதை நினைவுக்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் உதவிசெய்துகொள்ளாமல், உள்ளத்தில் பகையோடு ஒருவரை ஒருவர் கெடுப்பதிலேயே உறவினர்கள் இருப்பின், அவர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துபடுவார்கள், என்பதைச் சொல்லும் குறள்.

Transliteration:

uRalmuRaiyAn uTpagai thOnRin iRalmuRaiyAn
Edham palavum tharum

uRalmuRaiyAn  - Between the relatives, kith and kin
uTpagai thOnRin – if enmity with hidden hatred develops
iRalmuRaiyAn -  That will, for them all to perish and die
Edham palavum – many faults
Tharum – will bring forth

If among relatives, each one is bent on destroying others with hidden hatred fostered, that hidden hatred alone will bring them many faults to perish them all eventually. The story of “India Frogs” that were sent in an open containers comes to mind. If each one among relatives is scheming to destroy others, the whole clan is bound to perish eventually, hints this verse.

“If enmity brews between kith and kin, with hidden hatred
 it fosters faults a many, to destroy and perish all, decimated”


இன்றெனது குறள்:

உறவிடையே உண்டாகும் உட்பகையால் உண்டாம்
இறக்கச்செய் குற்றம் பல

uRaviDaiyE uNDAgum uTpagaiyAl uNDAm
iRakkachchei kuRRam pala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...