11th April 2013
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
(குறள் 356: மெய்யுணர்தல் அதிகாரம்)
Transliteration:
kaRRINDu meippoRUL kaNDAr thalaippaDuvar
maRRINDu vARA neRi
kaRRINDu – Learning all the
books on moral ways in this world, from a teacher
meippoRUL kaNDAr –
those who realized that which is
truthful and permanent
thalaippaDuvar – will
get
maRRINDu - Another life on this earth
vARA neRi – ways so that it
does not come (another birth in this world)
Those that pursue higher knowledge and learn
blemishless, the object of truth, will attain the path of not being born again
and again on this earth, declares this verse.
Sometimes it feels that vaLLuvar answered everytime
somebody asked a question on ethical issues, as a high priest of moral
authority on life of his times, in terms of these kuraL verses. Once again this
verse is an amalgamation of many things he has said earlier, about learning
higher truth, how one may not be born again on this earth etc,.
The idea of pursuit of higher knowledge showing the
path of not being born has been said in other literary works of Bhakthi and
morality as well. In SIvapurANam part of thiruvAsagam, mANikkAvAsagar
would pray not to be born again in this birth that is indulgent in nature. AraneRichchAram
says, the most of important of all knowledge is to understand the path of not
being born on earth again.. Kambar has also says in the context of
heavenly beings on earth this: Because of the faults of their own they were
born here and now having attained the knowledge of higher truth completely they
have reached heavenly abode.
It is acceptable that pursuit of higher truth! but a
question for everyone: Is being born such an unbearable curse?
Who in pursuit of higher knowledge and attain the object of
truth
Will attain the path not to be born again and again on this
earth”
தமிழிலே:
கற்றீண்டு - கற்கவேண்டிய அறநெறி நூல்களை
தக்க ஆசிரியடம் கற்று இவ்வுலகில்
மெய்ப்பொருள் கண்டார் - உண்மையான, நிலையான பொருளினைப் பற்றி அறிந்துகொண்டவர்
தலைப்படுவர் - பெற்றிடுவர்
மற்றீண்டு - மீண்டும் இவ்வுலக வாழ்வுக்காக
பிறப்பே
வாரா நெறி - வாராத வழியினை அடைந்திடுவர்.
கற்கவேண்டிய அறநெறிகளைக் கசடற, கற்றுத் தேர்ந்து, இவ்வுலகில்
நிலையான உண்மைப் பொருளை அறிந்து கொண்டவர்கள், மீண்டும் இவ்வுலக வாழ்வில் வந்து பிறக்காத
வழியினை அடைந்திடுவர், என்பதே இக்குறளின் பொருள்.
திருவாசகத்தில் வரும் சிவபுராணத்தில், “மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே” என்பார் மாணிக்கவாசகர். அறநெறிச்சாரப்பாடல் ஒன்று, “அறிவிற் கறிவாவ தென்னின் மறுபிறப்பு மற்றீண்டு
வாரா நெறி” என்று இதே கருத்தைச் சொல்கிறது. கம்பரும், “ஊனம்உற்றிட, மண்ணின் உதித்தவர்,
ஞானம்
முற்றுபுநண்ணினர் வீடு என” என்கிறார். குற்றம் நேர்ந்ததால், இம்மண்ணுலகத்தில்
பிறந்த தேவர்கள், பின்பு முழு ஞானம் பெற்று, தஙகள் உலகமாகிய வீட்டினை அடைந்தார்கள்
என்று இக்குறளை ஒட்டியே சொல்லியுள்ளார்.
சிலநேரங்களில், வள்ளுவர் அறநெறிகளினை
போதிக்கும், ஒரு உயர்ந்த மனிதராக மதிக்கப்பட்டு, அவ்வப்போது சிலர் கேட்ட கேள்விகளுக்கு,
அவர் கொடுத்த கவிதை வடிவ பதில்கள்தாம் இவையோ என்று தோன்றுகிறது. ஒரு பொருளைப் பற்றியோ,
அல்லது பலபொருள்களைப் பற்றி, ஒவ்வொரு சமயத்தில் கேட்ட கேள்விகளுக்கு வள்ளுவர் தந்த
பதில்கள்தாம் இக்குறள்களோ? பிறவாமை, உயர்பொருள் பற்றிய அறிவு என்பவை மீண்டும் மீண்டும்
பேசப்படுவதால், இவ்வாறு தோன்றுகிறது.
உயர்பொருள் பற்றிய அறிவு தேவைதான்.
ஆனாலொரு கேள்வி: வாழ்க்கை அத்துணை வெறுக்கத்தக்கதா? மறு பிறப்பு என்பது ஒரு யூகமா,
நிச்சயமா என்ற கேள்விக்கு உறுதியாக பதில் சொல்லமுடியாமல் போனாலும், அதை அந்த அளவுக்கு
வெறுக்கத்தக்கதா?
இன்றெனது
குறள்:
மீண்டும் பிறவா வழிபெறுவர் மெய்ப்பொருள்
தூண்டிடக் கற்றறிந் தார்
mINDum piRavA vazhipeRuvar meipporuL
thUNDiDak kaRRaRin dhAr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam