ஏப்ரல் 10, 2013

குறளின் குரல் - 363

10th April 2013

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
                            (குறள் 354: மெய்யுணர்தல்  அதிகாரம்)

Transliteration:
ayyuNarvu eidhiyak kaNNum bayaminRE
meyyuNarvu illA dhavarkku

ayyuNarvu – understanding the desires of five sense organs and the repercussions there in
eidhiyak kaNNum – even if those desires are quelled
bayaminRE- it is of no use
meyyuNarvu – realization about higher truth or the sense of something being truth or not.
illAdhavarkku – when a person (an ascetic) does not have (realization of truth)

After understanding the lures of five senses, and even after a person (ascetic) is able to quell the desires driven by those senses, it is of no use, if they have no realization of higher truth – is the thought expressed in this verse.

The word “meyyuNarvu” in literal sense means, realizing the truth. But in the context of this chapter, we need to understand it as the higher truth for salvation, or knowledge of path to Godhead.

One who transcends the lures of the five senses and the organs that desire them, and one who is in the awareness of yogis, is the Godhead, the only higher truth, says Rama to SumanthrA who is extremely sad that Rama is leaving for the forest to fulfill his fathers orders. That higer truth was called “poRivAyil aindhaviththAn” by vaLLuvar himself in the first chapter of “Hailing Godhead”

“What use is it even if desires of five senses quelled?
 If the higher truth of this birth is understood, realized!”

தமிழிலே:
ஐயுணர்வு - ஐம்புலன்களின் விழைவுகளும், அவ்விழைவுகளின் விளைவுகளையும்ம் நன்கு உணர்ந்து
எய்தியக் கண்ணும் - அவ்விழைவுகளின் அவாவினை அறுத்தபின்னும்
பயமின்றே - பயனில்லையே (வீடு பேறு பயவாமையின் பயம் எனப்பட்டது)
மெய்யுணர்வு - உண்மைப் பொருளைப் பற்றி உணர்வு
இல்லாதவர்க்கு - இல்லாமலிருப்பவர்க்கு (துறவிகளுக்கு)

ஐம்புலன்களின் விழைவுகளைப் புரிந்துகொண்டு, அவற்றை விலக்கி, அவற்றினால் விளையும் அவாக்களை அறுத்தாலும், பயனேதுமில்லை, உண்மைப் பொருளை, உயர் பொருளை அறியாதவற்கு, உணராதவற்கு! - இதுவே இக்குறளின் சாரம். மெய்யுணர்வு என்பது எது உண்மை எது உண்மையில்லை என்பதை அறிவதுமாகும்

மெய்யுணர்வு என்னும் சொல், உண்மையை உணர்வது என்ற பொருள் கொண்டாலும், உயர்பொருளாம் இறைப்பொருளே உண்மையென உணர்வது, நிலையாமையை உணர்வது, பிறந்திறக்கும் பிறப்பின்மை என்பதை உணர்வது என்றும் பொருள் கொள்ளப்படும்.

பொறிபுலன்களுக்கு அப்பாற்பட்டு அந்தக்கரணங்களையும் கடந்து நிற்பவனாய் யோகிகளின் மெய்யுணர்வுக்கே புலப்படுபவனாய் உள்ளவன் பரம்பொருள் என்பதை, சுமந்திரனுக்கு இராமர் கூறுவதாகக்கூறும் கம்ப இராமாயணப் பாடலின் பகுதி இது:

அடக்கும் ஐம் பொறியொடு கரணத்து அப்புறம்
கடக்கும் வால் உணர்வினுக்கு அணுகும் காட்சியான்

அப்பொருளையே, “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றும் வள்ளுவர் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே பாடினார்.

இன்றெனது குறள்:
என்னபயன் ஐம்புலனும் கொய்தாலும் மெய்யுணர்
வென்பதென்றும் எய்தார் எனின்?

Ennapayan aimpulanum koidhAlum meyyuNar
venbadhenRum eidhAr enin?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...