12th April 2013
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின்
ஒருதலையாப்
பேர்த்துள்ள
வேண்டா பிறப்பு.
(குறள் 357: மெய்யுணர்தல் அதிகாரம்)
Transliteration:
OrththuLLam uLLadhu uNarin oruthalaiyAp
pErththuLLa vENDA piRappu
Orthth(u) uLLam – Deeply
pondering in hearts,
uLLadhu uNarin –
understanding what the higher truth really is
oruthalaiyAp- understanding
what the real truth (to be added to the
previous word)
pErthth – contrary to the
learning and understanding
uLLa vENDA – don’t thinking
piRappu – there will be
birth
Having
deeply thought about and realized what the high truth is do not think there is
rebirth for such realized souls, with mind going astray with delusion. Though
the mind attains maturing with deep and sincere inquiry, sometimes, it can be
clouded by thoughts contrary to what was learned from the authentic teachers.
It might think the truth to be false and the vice versa. vaLLuvar advises that such delusion should
not be there.
Kamban
in Ramayana says it an elaborate verse as follows: One who discerns that both
glorious life that even celestials would praise and the life of begging for
food, are just the result of what we know to be good and bad deeds of humans on
earth. He says, to severe from the
connection with either, we must reach out and pray to the erudite scholars, up
on the hills that are enemies to these two deeds and they are worthy worshiping
from here. Even the symbolism of “up on the hills” is to denote the elevated
stature of such great souls of erudition.
The purpose of search of knowledge is
to get clarity. Once the clarity is attained one should never given into any
doubts. In todays, alternated verse, I have used the words, “arunporuL” and “meypporuL”.
Though arunporuL makes sense rare knowledge, meypporuL says it directly as “the
high truth”.
“Having deeply understood in hearts, the higher truth
Contrary to the learning
do not think, there is rebirth”
தமிழிலே:
ஓர்த்துள்ளம் - ஆராய்ந்து உள்ளத்தில்
உள்ளது உணரின் - மெய்ப்பொருளாவது யாது என்று உணர்ந்துகொண்டால்
ஒருதலையாப் - இப்பொருளின் கருத்து இன்னது என (உள்ளது உணரின்
இங்கு சேர்க்கப்படவேண்டும்)
பேர்த்து - மாறி,
அதாவது அறிந்த மெய்ப்பொருளின் பலனாக இல்லாது, வேறாக வரும் (எது? பிறப்பு!)
(உ)ள்ள வேண்டா - நினைக்க வேண்டாம்
பிறப்பு - பிறப்பினை (பேர்த்து என்ற
சொல்லோடு சேர்த்துப் படிக்கவேண்டும்)
ஆராய்ந்து உள்ளத்தில் மெய்ப்பொருள் யாதென்று உணர்ந்த பின்னர்,
மயக்கத்தில் மறு பிறப்பு உண்டென்று நினைக்கவேண்டா என்று கூறுகிறது இக்குறள். எத்தனையோ
மனது பக்குவப்பட்டாலும், சில நேரங்களின் அறிவு மயங்கி, உண்மையென்று உணர்ந்த ஒன்றே பொய்யோ
என்றும், பொய்யென்று நிறுவப்பட்ட ஒன்றும் உண்மைபோலவும் தோன்றிவிடும்.
கம்பரின் கீழ்வரும் பாடல் இக்கருத்தை குறள் விளக்கமாக விரித்துச்
சொல்கிறது. இது சுக்ரீவன் தன்னுடைய வீரர்களுக்கு சொல்வதாக நாடவிட்ட படலத்தில் வரும்
பாடல்.
இருவினையும் இடைவிடா எவ்வினையும் இயற்றாதே இமையோர்
எய்தும்
திருவினையும் இரும்பதம்தேர் சிறுமையையும் முறை ஒப்பத்
தெளிந்து நோக்கிக்
கருவினை அது இப்பிறவிக்கு என்றுணர்ந்து அங்கு அதுகளையும்
கடையில் ஞானத்து
அருவினையின் பெரும்பகைஞர் ஆண்டு உளர் ஈண்டு இருந்தும்
அடி வணங்கர் பாலார்
இப்பாடலின்
கருத்து: நல்வினை தீவினைகளாகிய இரண்டு வினை
களையும் இடைவிடாமல் தொடர்பு
கொண்டுள்ள எந்தக்
கருமங்களையும் செய்யாமல் தேவர்களும் புகழும் படியான நிறைந்த செல்வ
வாழ்க்கையையும்
பிச்சையாக இடும்
சோற்றை எதிர்பார்த்திருக்கும் தாழ்வையும் சமமாகத் தெளிந்துப் பார்த்து
இந்தப் பிறப்பு உண்டாவதற்கு மூலகாரணம் அந்த
இருவினைகளேயாகும் என்று தெளிந்து அவ்வினைகளின்
தொடர்பை அந்த இடத்திலேயே நீங்குதற்குரிய எல்லையற்ற தத்துவ அறிவினையுடைய போக்குவதற்கு
அரிய இருவினைகளுக்குப் பெரிய
பகைவர்கள் அம் மலையில் இருக்கின்றார்கள்; அவர்களை இங்கிருந்த
படியே அவர்களிருக்கும் திசை நோக்கி தொழுவதற்கு உரியவராவர்.
அறிவைத்
தேடலின் பொருளே தெளிவு. அத்தெளிவு பெற்றபின் மயங்குதலுக்கு சிறிதும் இடம் தரக்கூடாது.
இன்று மாற்றுக்குறள் எழுதும் போது “அரும் பொருள்” என்று எழுதிவிட்டு, பின்பு அரும்
பொருளாகச் சொன்னாலும் அதுவும் மெய்ப்பொருளாக இருத்தல் வேண்டுமென்று,
இன்னுமொரு குறளையும் சற்று மாற்றி எழுதினேன்.
இன்றெனது
குறள்(கள்):
அரும்பொருளை ஆன்றோர்சொல் கேட்டுணர்ந்தோர்
மீண்டும்
வரும்பிறப் பென்றெண்ணா தீர்
arumporuLai AnROrsol kETTuNarndhOr mINDum
varumpiRap penReNNA dhIr
மெய்ப்பொருளை ஆன்றோர்சொல்
கேட்டுணர்ந்தோர் மீண்டுவரும்
பொய்ப்பிறப் பென்றெண்ண லென்?
meyppoRuLai AnROrsol
kETTuNarndhOr mINDuvarum
poipiRap penReNNa len?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam