மே 23, 2012

குறளின் குரல் - 44


May 23rd, 2012

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
                                (குறள் 33: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:
Ollum vagaiyAn aRavinai OvAdhE
SellumvAi ellAnj cheyal.

Ollum  -  Able to do
vagaiyAn  - in all possible ways ( where one is able to do)
aRavinai  - deeds of virtue
OvAdhE – Without stopping
SellumvAi – by good thinking (mind), good words (speaking) and good deeds (body with its sesnse) bycapable faculties of the body (referring to five senses) – (manO, vAk, kAyam)
ellAnj – Using all of them (the five senses)
cheyal – do (the deeds of virtue)

However possible, stead the virtuous path and deeds, without
pause or stop, with all your capable senses and good thought

Here is a simple verse true to the nature of this chapter insisting on steading the path of virtue and doing the deeds accordingly, wherever and however possible with all capable senses, and good thoughts in mind.

Understanding the limitations of human beings and the capabilities of different people, he makes it simple for everyone. Each is capable of certain things, based on their situations, physical, mental capabilities and what they can do or not. So, he carefully words “Ollum vagaiyaan”, meaning, in whichever possible ways one is capable of doing the good deeds.

But he also insists on consistency and continuity of being and doing so! Afterall, doing good deeds does not take vacation or can be stopped for any reason. Though there is a well known adage “pAththiram aRindhu pichayidu”, referring to the story of how gullible Seethaa was abducted by RaavaNaa, vaLLuvar, does not put such restrictions.

Even though superficially it may seem like that Seetha suffered because of her not knowing who she was giving alms to and what was about to come, the end was good because RaavaNaa was eventually vanquished and killed. So, good deeds done knowingly or unknowingly of immediate repurcushions, eventually bring good in return.

Another subtle point he makes, about “sellum vAi” implying which faculties can do good. The primary faculty that should be good for doing is one’s mind. If the mind thinks good, then whichever faculties are functional and capable of deeds of good virtue, they should be used to do the same. 

So, there are three important aspects that are insisted in this verse. All possible ways, without stop or pause and through all the capable faculties and seses, one must do virtuous deeds.

ஒல்லும் – இயன்ற (தம்மால் இயன்ற, தாம் அறிந்த)
வகையான் - வழிகளிலெல்லாம்
அறவினை – அறச்செயல்களை (அவற்றைச் செய்வதினாலேயே அறவழி வாழ்வு என்பதும் தெளிகிறது)
ஓவாதே – ஓயாமல் (நல்லவற்றைச் செய்வதற்கு விடுமுறையா கொடுக்கமுடியும்)
செல்லும்வாய்  -  செய்யக்கூடிய பொறிவழிகள் (ஐம்புலன்களும், மனம் என்ற சூக்குமமும்)
எல்லாஞ் – அவைகளால் (புலன்களாலும், புலன்களை மற்றும் புலன்களால் இயக்குகின்ற மனத்தினாலும்)
செயல் - செய்வீர்

இந்த எளிய குறளின் மூலம் இந்த அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் “வலியுறுத்தலை” அழகாக, சுருக்கமாக, நறுக்கென்று கூறியுள்ளார் வள்ளுவர். அறவழி நிற்றலையும் வினைகள் ஆற்றுவதையும், எவ்வழிகளிலெல்லாம் முடியுமோ, எப்புலன்களால் செய்யவியலுமோ, செய்யவேண்டும், அதுவும் இடையறாமல், தடையுறாமல்.

வெவ்வேறு மனிதர்களின் ஆற்றல்களின் வேறுபட்ட எல்லகளை மனதில் கொண்டு, எல்லோருக்கும் எளிதாக இருக்ககூடிய வகையிலே இக்குறளை எழுதியுள்ளார். யாரால் எது முடியும் என்பது அவர்களது நிலைகளம், உடல், மற்றும் மனம் சார்ந்த திண்மை, திறமை இவற்றைப் பொருத்தது.  அதனாலேயே “ஒல்லும் வகையான்” என்றது.

அதோடு இல்லாமல், நிலைத்தன்மையும், தொடர்த்தன்மையையும் வலியுறுத்திச் சொல்லுகிறார். அறவழிகளை சிந்தையில் கொள்வதற்கும், அறவழி செயலாற்றலுக்கும் விடுமுறை கொடுக்கமுடியாதல்லவா? ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்ற தொன்மொழி ஒன்றுண்டு. இது, ராவணனுக்கு சீதை பிச்சையளித்ததையும், அதனால் நிகழ்ந்த பின் விளைவுகளையும் மனதில் கொண்டு சொல்லப்பட்டது.  மேலோட்டமாகப் பார்த்தால், அவள் செய்த நல்ல காரியமே அவளுக்கு துன்பச் சிறையை தந்து ராமனிடமிருந்து பிரிவையும் தந்தது. ஆனால் அவள் அறவழி நின்றதாலேயே  ராவாணசுர அழிவு என்கிற நல்லதும் நடந்தது என்ற உண்மையே நம் உள்ளத்தில் தைக்கவேண்டும்.  அதனால் சில சமயங்களில் அறன்வழிகளால், உடன்வரும் துன்பங்களால் துவளாதிருந்தால், முடிவில் நல்லதே நடக்கும் என்பதன் கருத்தே இது.

“செல்லும் வாய்” என்றதால், இயன்ற பொறிவழிகளால் என்று யாரும் எந்தவித “நொண்டிச் சாக்கும்” சொல்லமுடியாதபடி செய்துவிட்டார். நல்லதை நினைக்கும் மனமிருந்தாலேகூட போதுமே! உயிருள்ளவரை மனமிருக்கும், மனமிருக்கும்வரை அறவழி சிந்திக்கலாமே!

முடிவாக, மூன்று சிந்தனகளை முன்வைக்கிறார் “முனைவர் வள்ளுவர்” (பட்டங்கள் பறக்கும் இக்காலத்திலே அவருக்கு ஒரு காலம் முடிந்த விருது கொடுத்தால்தான் என்ன? – தமிழர்கள் தயங்காமல் ஏற்றுக்கொள்வதுதானே!)
இயன்ற அறங்களைச் செய்தல், ஓய்வின்றிச் அவற்றைச் செய்தல், இயன்ற பொறிவழிகளால் அவற்றைச் செய்தல் என்ற மூன்றும்தான் அவை!

இன்றெனது குறள்:

அறிவழியில் இன்னறத்தை செய்வீர் ஒழியாப்
பொறிவழியில் தேர்ந்த விடத்து

(அறிவழி – தெரிந்த வழிகளில்; ஒழியா – முடங்காமல், ஓயாமல்,ஓவாமல்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...