மே 22, 2012

குறளின் குரல் - 43


May 22nd, 2012

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
                                 (குறள் 32: அறன்வலியுறுத்தல் அதிகாரம்)

Transliteration:
aRaththinUngu Akkamum illai adhanai
maRaththalin Ungillai kEdu.

aRaththin - – Like being virtuous
Ungu - greater
Akkamum illai  - no gain or prosperity and elevated status in life
Adhanai maRaththalin – By forgetting or ignoring that (to be virtuous)
Ungillai  kEdu – there is no greater harm that can come to us.

This verse is the continuation of the previous verse and once reiterates the gains of being virtuous. In addition it also says, forgetting or ignorning virtual ways will cause greater harm.  If somebody were to say, “so what” for the previous verse, this verse tells them that not being virtuous causes greater harm in addition.

Sometimes, just to reiterate something forcefully, we need to give both the benefits of being some way as well as repercussions of not being so. That’s exactly what vaLLuvar has tried.  The word meaning of “maRaththalin” is “forgetting”.  “Ignoring” seems more of an intended and appropriate meaning.

Forgetting can be a simple mental malfunction and that can happen due to many reasons. But ignorning is done with the intent and full cognizance of mind; it is either due to utter ignorance or absolute arrogance. Eitherway, it causes immense trouble for anyone, which is what vaLLuvar conveys through this verse.

None other than virtue gives greater prosperity and gain
No worse can be there for forgetting and lead a life in vain.

தமிழிலே:

அறத்தின்– அறவாழ்வைப் போல
உங்கு - உயர்வான, மிகுதியான, விசேடமான
ஆக்கமும் இல்லை –ஏற்றம் தருவது ஏதுமில்லை
அதனை மறத்தலின் – அவ்வாறு வாழாமல் மறத்தலைப் போன்ற
ஊங்கில்லை கேடு – (ஊங்கு கேடு இல்லை) மிகுதியாகக் கெடுதலைத் தரக்கூடியது எதுவுமில்லை

சென்ற குறளின் தொடர்ச்சியாகவே இக்குறள் உள்ளது. அறத்தின் வழி வாழ்வை வலியுறுத்திச் சொல்கிறது. அறத்தின் வழியது ஆக்கமும், உயர்வும் என்பது சென்ற குறளிலேயே சொல்லப்பட்டது. “அதனால் என்ன?” என்று இடக்குபவர்களுக்காக, இக்குறளில் அதை வலியுறுத்தும் விதமாக மீண்டும் சொல்லி, அறவழி நடவாமையைப் போல கேடு தருவதுமில்லை என்று உரத்துச் சொல்லுகிறார்.

ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் சொல்லுவதால், அது உறுதி படுகிறது, நிலை படுகிறது. ஒன்றினால் வரும் பயனைச் சொல்லி, அவ்வாறில்லையெனில், வரும் பெருந்துன்பங்களைக் கூறும் போது, பயனின் சிறப்பு மனதில் பதிகிறது.

“மறத்தலின்” என்று சொல்லியது ஏதோ “நினைவில் இருந்து பின்னர் நினைவு அழிபட்டது” என்றில்லை. செய்யாமல் புறக்கணித்தல் என்று கொள்ளவேண்டும்.  மறத்தல் என்பது மன்னிக்கக்கூடிய ஒன்றே. புறக்கணித்தல் என்பது தெரிந்தே, அறிவின்மையாலோ, ஆணவத்தாலோ செய்வது. இரண்டுமே நம்மை பெருந்துன்பத்தில் ஆழ்த்திவிடக்கூடியவைதான். அறிவின்மையும் கூட ஓரளவுக்கு மன்னிக்கப்படலாம், அறிந்துகொள்ளும் முயற்சி இருப்பின். அறிவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் இயலாது என்னும் போது, அது ஆணவத்தோடு சேர்ந்து கொள்கிறது. 

ஊங்கில்லை கேடு என்றதும், அதன் காரணமாகவே. மிக்கவும் கேடு என்பது அறியாமையால் வருவது அல்ல; அறிந்து கொள்ள வாய்ப்பிருந்தும் அறிந்து கொள்ளாமலும், ஆணவத்தாலும் புறக்கணிப்பதும், கேட்டினைத் தருபவை.

இன்றெனது குறள்:
உயர்வளிக்க நல்லறம்போல் இல்லை- அயர்ந்தார்க்
கயர்வளிக்கும் கேடுவேறில் லை
(அயர்ப்பார் – மறந்தார்க்கு, அயர்வளிக்கும், வருத்தத்தை அளிக்கும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...