மார்ச் 28, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 27

उररीकृतकाञ्चिपुरीमुपनिषदरविन्दकुहरमधुधाराम्
उन्नम्रस्तनकलशीमुत्सवलहरीमुपास्महे शम्भोः 27

உரரீக்ருத காஞ்சி புரீம் உபநிஷதரவிந்த குஹர மது தாராம் |
உன்னம்ர ஸ்தனகலசீம் உத்ஸவலஹரீம் உபாஸ்மஹே சம்போ:  || (27)

காஞ்சீபுரியை தன்னுடையதாக உறுதிகொண்டவள்; உபநிடதங்களாகிய தாமரையின் நடுவிலிருந்து பெருகும் தேன் போன்றவளும், உயர்ந்து கலசங்களைப்போன்ற மார்பகங்கள் கொண்டவளும், மகிழ்வைத் தரும் பரமசிவனுடைய பேரானந்தத்தின் அலைபோன்றவளும், ஆகிய காமாக்ஷியை வழிபடுவோம்.

தவகாஞ் சிபுரி தனதென் றுரிமை தனைநிறுத்தும்,
உவந்திடும் தேனாய் உபநிடத் தாமரை உள்பெருக்கும்,
கவரும் உயர்ந்த கலசமாய் மார்பகக் காட்சியுடை,
சிவனார் மகிழ்வின் திரையினை வந்தித் திருமனமே

திரை- அலை



மார்ச் 27, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 26

मोदितमधुकरविशिखं स्वादिमसमुदायसारकोदण्डम्
आदृतकाञ्चीखेलनमादिममारुण्यभेदमाकलये 26

மோதித மதுகர விசிகம் ஸ்வாதிம ஸமுதாய ஸார கோதண்டம் |
ஆத்ருத காஞ்சீ கேலனம் ஆதிமம் ஆருண்யபேதம் ஆகலயே ||  (26)

மலரம்புகளை தன்கையில் வண்டுகள் இன்புற்றிருக்கக் கொண்டவள்; ஈதனைய இனிப்பில்லை என்னுபடியான கோதண்ட வில்லைக் கொண்டவள் (கரும்பு வில்); புண்ணிய காஞ்சீ தலத்தில் தம் விளையாடல்களைச் செய்வதில் ஆர்வமுள்ளவள்;; எல்லாவற்றுக்கும் துலக்கமாகன ஆதியை, தூய சிவப்பு நிறத்ததை நெஞ்சில் இருத்தி துதிக்கின்றேன், தியானிக்கின்றேன்.

மலர்பாணம் கொண்டனள் வண்டுகள் இன்பில் மகிழ்ந்திருக்க;
இலையிணை என்றே இனித்திடும் வில்லினை ஏந்தியவள்;
தலமது காஞ்சியில் தாம்விளை யாடிடும் தாயவளை
துலங்கும் முதலை, இராகத் தினையுள் இருத்தினனே

இலங்கும்-மின்னும் முதலை- முதற்பொருளை; இராகம் - சிவப்பு

மார்ச் 26, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 25

संश्रितकाञ्चीदेशे सरसिजदौर्भाग्यजाग्रदुत्तंसे
संविन्मये विलीये सारस्वतपुरुषकारसाम्राज्ये 25

ஸம்ச்ரித காஞ்சீதேசே ஸரஸிஜ தௌர்பாக்ய ஜாக்ரத் உத்தம்ஸே |
ஸம்வின்மயே விலீயே ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே || (25)

அது காஞ்சீபுரத்தை தன்னிருப்பிடமாகக் கொண்டது; தாமரைப் பகைவனாம் சந்திரனைத் தன் தலையணியாகக் கொண்டது; சரசுவதியே தங்கி ஆட்சி புரிவதுபோன்ற வாக்கின் வலிமை கொண்டது; தன்னகத்தே பேரறிவைக் (ஞானத்தை) கொண்டது; அத்தகு மூர்த்தியினிடத்தில் நான் லயமடைந்திருக்கிறேன்.

தங்குமாம் காஞ்சீயில்; தாமரை யின்பகை சந்திரனோ
தங்குமாம் மேல்பூண் தலையணி  யாக; சரசுவதி
தங்குமா ஆட்சிபோல் தாம்சொல் வலிமை தனதெனவே

தங்குமா ஞானத்தில் தான்தன் மயமாகித் தங்குவனே

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...