மே 06, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 66

दग्धषडध्वारण्यं दरदलितकुसुम्भसम्भृतारुण्यम् ।
कलये नवतारुण्यं कम्पातटसीम्नि किमपि कारुण्यम् ॥66॥

தக்த ஷடத்வாரண்யம் தரதலித குஸும்ப ஸம்ப்ருதாருண்யம் |
கலயே நவ தாருண்யம் கம்பா தடஸீம்னி கிமபி காருண்யம் ||66||

ஆறு வழிகளென்னும் (அத்துவாக்களை) காடுகளை சுட்டெரித்ததும் (கடந்ததும்), சற்றே மலர்ந்த குங்குமப் பூவின் சிவப்பு நிறத்தைக் கொண்டதும், புது இளமையைக் கொண்டதும், கருணை வடிவினளையும், கம்பை நதிக்கரையில் நான் அறிகிறேன்.

கம்பைக் கரையில் கருணை வடிவாய் கனிந்தவளை
செம்கோளே சம்போல் சிறிதே மலர்ந்து சிவந்தவளை
எம்பும் புதிய இளமை உடைத்தாளை இக்கடமாம்
நம்மறு அத்துவ ஞானம வித்தாளை நண்ணினேனே


கோளேசம் - குங்குமப்பூ; எம்பும் - பொங்கும், கடம்- காடு; அத்துவ- பாதை, வழி;

மே 05, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 65

कुसुमशरगर्वसम्पत्कोशगृहं भाति काञ्चिदेशगतम् ।
स्थापितमस्मिन्कथमपि गोपितमन्तर्मया मनोरत्नम् ॥65॥

குஸுமசர கர்வ ஸம்பத் கோசக்ருஹம் பாதி காஞ்சிதேசகதம் |
ஸ்தாபிதம் அஸ்மின் கதமபி கோபிதம் அந்தர்மயா மனோரத்னம் ||65||

மலர் பாணமுடைத்தானின் செல்வச் செருக்கின் கருவூலமாக காஞ்சியின் நடுவிலுள்ளது; இதனுள் என் மனமாகிய இரத்தினம் என்னால் எப்படியோ காப்பாற்றி வைக்கப்பட்டுள்ளது.

மலரம்பன் செல்வ மதத்தின் கருவூல மானவொன்று
நிலவிடும் காஞ்சியில் நின்றதன் மையத்து நித்தியமாய்
இலங்கித் துலங்கும் எனதுள் ளிருக்கும் இரத்தினத்தை
வலமுடனே யானுமெவ் வாறாறோ காப்பாற்றி வைத்தேனே
மதம் - கர்வம், செருக்கு;  வலம்- வெற்றியுடன்

மே 04, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 64

கேனாபி மிளித தேஹா யூநா ஸ்வாஹாஸஹாய திலகேன |
ஸஹகார மூலதேசே ஸம்வித்ரூபா குடும்பினீ ரமதே ||64||

ஸ்வாகா தேவியின் பதியாம் அக்னியை நெற்றிப்பொட்டாக உடைய, வருணனைக்கு அப்பாற்பட்ட ஒரு இளம் வாலிபனுடன், மாமரத்தின் அடியில் சிவசக்தியாக இணைந்தவள், ஞானமே வடிவானவள், இல்லத்தரசியாக மனமகிழ்வுடன் வாழ்கிறாள்.

சுவாகா பதியை சுமந்தே நுதலில் துலங்குவானும்
உவாவும் உவமிக்க ஒண்ணா ஒருவனில் ஒன்றியதில்
தவாத சிவசக்தி தானாகி, ஞானம தன்வடிவின்
குவாவாகி மாதருகீழ் கூடிக் குலப்பெண் குசைத்தாளே

உவா - யுவன்; தவாத - நிலைமாறாத; குவா - குவியல்; குசை - மகிழ்ச்சி

மே 03, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 63

कौतुकिना कम्पायां कौसुमचापेन कीलितेनान्तः ।
कुलदैवतेन महता कुड्मलमुद्रां धुनोतु नःप्रतिभा ॥63॥

கௌதுகினா கம்பாயாம் கௌஸும சாபேன கீலிதேனாந்த: |
குலதைவதேன மஹதா குட்மல முத்ராம் துனோது ந: ப்ரதிபா ||63||

கம்பை நதிக்கரையில் விருப்பமுள்ளதும்,  மலர்களால் அலங்கரிக்கப்பட்ட (அல்லது மலர் பாணங்களையுடைய) வில்லை உடையவனாம் மன்மதனால் காதல் நிரம்பிய மனமுள்ளதும்,  உயரிய குலதெய்வமாக உள்ளதுமாய ஒன்றினால் என் அறிவு மொட்டிலிருந்து மாறி மலராகட்டும்.

கம்பைக் கரையில் களிக்க விரும்பிடும் காரிகையாள்
அம்புகள் பூக்கும் அழகுவில் ஏந்தும் அநங்கனவன்
தம்திறத் தாலுளம் தங்கிடும் காதல் தளும்பியவள்

எம்குலத் தேவால் எதிரும் அரும்பாம் எனதறிவே

மே 02, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 62

प्रेमवती कम्पायां स्थेमवती यतिमनस्सु भूमवती ।
सामवती नित्यगिरा सोमवती शिरसि भाति हैमवती ॥62॥

ப்ரேமவதீ கம்பாயாம் ஸ்தேமவதீ யதிமனஸ்ஸு பூமவதீ |
ஸாமவதீ நித்யகிரா ஸோமவதீ சிரஸி பாதி ஹைமவதீ ||62||

இமவானுடைய பெண்ணான காமாக்ஷியானவள், கம்பா நதியினிடத்தில் அன்புள்ளவள்; துறவிகளின் மனதில் கட்டுப்பட்டு நிலைத்திருப்பவள்; மகிமை பொருந்தியவள்; அழிவில்லா வேதங்களால் புகழப்படுபவள்; தன்னுடைய தலையில் சந்திரனை உடையவள் என்றபடியெல்லாம் விளங்குபவள்.

கம்பை நதிமேல் கனிந்தாளாம் காதலைக் கட்டியவர்
தம்மனத் தேநிலை தங்குவளாம்; செல்வமும் தாமாவாள்;
அம்புலியைத் தாங்கும் அழகாம் சிரசும் அமைந்தாளாம்;
விம்மு விழுப்பொருள் வேதம் புகழ்ந்திடு விந்தையளே

மே 01, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 61

तुष्यामि हर्षितस्मरशासनया काञ्चिपुरकृतासनया ।
स्वासनया सकलजगद्भासनया कलितशम्बरासनया ॥61॥

துஷ்யாமி ஹர்ஷிதஸ்மர சாஸனயா காஞ்சிபுர க்ருதாஸனயா |
ஸ்வாஸனயா ஸகல ஜகத்பாஸனயா கலிதசம்பராஸனயா ||61||


மன்மதனைத் தண்டித்தவரான பரமசிவனை மகிழ்வுறச் செய்தவளும், காஞ்சீபுரியில் இருப்பிடத்தைக் கொண்டவளும், தன்னில் தானே நிலைத்தவளும், எல்லா உலகங்களையும் (மாயையால்) புலப்படுமாறு ஒளி செய்தவளும், சம்பர வைரியை (மன்மதனை) மீண்டும் பிறக்கும்படி செய்தவளாளுமானவளால் நான் மகிழ்வடைகிறேன்

மன்மத வைரி மகிழ்வுறச் செய்திடு மாண்புடையாள்
தன்னில் நிலைபெறு தன்மையள் காஞ்சி தலமுறைவாள்
தன்னரு ளாலவள் சம்பர வைரியை தானுயிர்ப்பாள்
இன்னு லகிலெல்லே ஈவாளால் என்னுளம் இன்புறுதே

எல் - ஒளி; சம்பர வைரி - மன்மதன்; மன்மத வைரி - சிவன்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...