நவம்பர் 03, 2015

குறளின் குரல் - 1293

3rd Nov, 2015

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.

                           (குறள் 1287: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

உய்த்தல் அறிந்து - அது தன்னை மாய்த்துவிடும் என்று அறிந்தும்
புனல் பாய்பவரேபோல் - ஆற்று வெள்ளத்தில் பாய்பவரைப்போல
பொய்த்தல் அறிந்(து) - அவனைக் கண்டபோது தோற்றுப் போகுமென்றறிந்தும்
என் புலந்து?- நான் ஏன் ஊடல் கொள்ளவேண்டும்?

பிறிவாற்றாது, தன்னுடைய தலைவன்பால் தாம் கொண்ட கோபமானது, அவனைக அண்மையில் கண்டதும் தோற்றுப்போகும் என்றும் அறிந்தும் ஏன் பொய்யாக ஊடல் கொள்ளவேண்டும் என்று தன்னையே வினவிக்கொள்கிறாள் தலைவி. இது எப்படியென்றால், வெள்ளமாகப் பொங்கியோடும் ஆற்றினிலே பாய்ந்தால் மாய்வது உறுதி என்று அறிந்தும் சிலர் பாய்கிறார்களே, அது போன்றதாகும் என்று சொல்லிக்கொள்கிறாள்.

சென்ற குறளின் கருத்தாக்கமே இக்குறளும், உவமையோடு!

Transliteration:

Uittal aRindu punalpAi bavarEpOl
Poittal aRinden pulandu

Uittal aRindu – though aware that it would kill
Punal pAibavarEpOl – one who dares to jump in to the flooding river
Poittal aRind(u) – knowing it would fail, the moment she sees her beloved
en pulandu? – why pretend to be in love-quarrel?

The maiden knowing her inability to keep her anger and pretense of love quarrel, asks her self thus: Knowing very well, jumping into flooding river would kill certainly some do jump foolishly. Likewise, knowing my pretence anger would not last seeing him, why in vain should I feign anger? This verse is similar in content to the previous verse, but with an analogy.

Why pretend to be in love quarrel knowing it would fail!
Like jumping into flooding river would kill without a trail”

இன்றெனது குறள்:

ஆற்றுவெள்ளம் மாய்ப்பது தேறினும் பாய்வார்போல்
தோற்றல் அறிந்தூடல் ஏன்?

ARRuvELLam mAippadu tERinum pAivArpOl
thORRal aRindUDal En?

நவம்பர் 02, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் - 8

தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
செய்வது நன்று ஆகுமோ ——   கபிலர். கலித். 60 :  7- 8

பொருள்:
தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிதிற் செய்து இன்பத்தைத் தருமோ ?.

தமக்கு ஒன்று இன்பம் பயக்கிறது என்பதால் பிறர்க்கு வலிந்து சென்று துன்பம் தருவது  நல்லதுதானா? என்று கேட்கிறார் கபிலர். ஆனால் இப்படியெல்லாம் கேட்டால் பெரும்பாலோருக்குப் புரிவதில்லை என்று,  பின்னாளில் வள்ளுவரும், பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் என்றார் போலும். 

ஆயினும் எத்தனைத்தான் எழுதிவைத்தும் என்ன பயன்? கொள்வார் சிலரே! தாம் ஒரு கண்ணை இழந்தாலும் அடுத்தவருக்கு இரண்டு கண்கள் போகிறதே என்று மகிழ்வோர்தாம் பலரும். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்களில் பலரும் அறத்தைப் பற்றி அடுத்தவருக்கு எடுத்துச்சொல்லும் அறங்காவலர்கள்! ஆனால் மனித சமூகத்தின் அடித்தளமே இதில் தானே இயங்குகிறது? தனி மனித வாழ்வாகட்டும், சமூகக் கூட்டமைப்பாகட்டும், தம் நன்மை ஒன்றே கருதுவதுதானே முதன்மையாக இருக்கிறது. மகாபாரதப்போராகட்டும், பின்பு வந்த நமக்குத் தெரிந்த உலகப்போர்களாகட்டும், ஜிஹாத் என்று அழைக்கப்படும் மதம் சார்ந்த பயங்கரவாத செயல்களாகட்டும், எல்லாவற்றிலுமே ஒரு சாரார் தமக்கு இன்பம் தருவது என்பதற்காக பிறரை அழிக்கவும் தயங்காத ஒன்றைத்தாமே காட்டுகின்றன.

இந்திய துணைக்கண்டத்திலே, தமிழ் நாடு ஒரு சிறிய பகுதி. அதிலே சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்கள், தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்ததாக சரித்திரம் இருந்ததா? இல்லையே.. தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டார்கள், அல்லது மற்றவர்களோடு போரிட்டார்கள்.. எல்லாம் எதற்காக? அடிப்படையில் தங்கள் இன்பத்திற்காக மற்றவர்க்குத் துன்பத்தைத் தரவும் தயங்காததினால்தான். இதுவே உலகத்தில் பொதுவழக்காக இருந்ததை சரித்திரத்தின் பக்கங்கள் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றன.

ஆனால் கவிஞர்கள் உள்ளம் எப்போதுமே ஒரு சமநிலைப்பாட்டையே விரும்பி வந்திருக்கிறது அன்றும் இன்றும், என்றும்.

அதனால் கவிஞர்கள் வழியே நின்று நானும் இன்னும் வலிந்துச் சொல்லுவேன்.

பிறர்கின்னா செய்யா பெருந்தகை உள்ளம்
அறவேயற் றால்நன்றோ சொல்வீர் - அறத்தான்
சிறப்பதே இன்பமாம் அஃதிறக்கின் என்றும்

உறக்கமில் துன்பே யுறும்

குறளின் குரல் - 1292

2nd Nov, 2015

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

                           (குறள் 1286: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

காணுங்கால் - என் காதலரைக் கண்டு அவருடன் இருக்கும்போதெல்லாம்
காணேன் தவறாய - அவர் குற்றங்கள் எனக்குப் புலப்படா, குறைகளைக் காணமாட்டேன்
காணாக்கால் - அவர் என்னைப் பிரிந்து நான் அவரை காணாதிருக்கும்போது
காணேன் தவறல்லவை - அவரிடதில் குற்றங்களைத்தவிர வேறு எவற்றையும் காணவில்லை

காதற் கணவரோடு கூடியிருக்கையில், அவரிடம் உள்ள தவறுகளைக்கூட நான் பார்ப்பதில்லை; அவர் என்னுடன் இல்லாது பிரிந்து சென்றபோது, அவரிடம் தவறுகளைத் தவிர நான் வேறு எதுவும் நல்ல குணங்களை நான் பார்க்கவில்லை என்று தோழியிடம் தன் மனநிலையைச் சொல்லிப் புலம்புகிறாள் காதற் தலைவி.

இது மிகுந்த அன்பின் காரணமாக வருவது. கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சிப் பதிப்பிலே முத்தொள்ளாயிரத்தினின்றும், கலிங்கத்துப் பரணியினின்றும் இக்குறளை ஒட்டிய பாடல்களை மேற்கோளாகக் காட்டியுள்ளார். அவையாவன:

“மாணார்க் கடந்த மறவெம்போர் மாறனைக்
காணாக்கால் ஆயிரமும் சொல்லுவேன் கண்டக்கால்
பூணாகம் தாவென்று புல்லப் பெறுவேனோ
நாணோ டுடன் பிறந்தநான்”   (முத்தொள்ளாயிரம்)

“பேணும் கொழுநர் பிழைகள் எல்லாம்
       பிரிந்த பொழுது நினைந்தவரைக்
காணும் பொழுது மறந்திருப்பீர்
       கனபொற் கபாடம் திறமினோ”  (கலிங்கத்துப் பரணி 65)

Transliteration:

kaNunngkAl kANEn tavarAya kANAkkAl
kANEn thavaral lavai

kaNunngkAl – When I see him and be with him
kANEn tavarAya – even his mistakes, or wrong deeds, I would not see
kANAkkAl – When I don’t see him, because he has gone away leaving me
kANEn thavarallavai – I would not see anything right on his side..

The maiden laments to her friend in this verse. “When he is with me and I see him, even his mistakes and wrong deeds, I would not see; But when he has gone away leaving me, I would not see anything right on his side and would only find wrong doing on his part.

This state is perhaps because of excessive love and the pangs of separation.  Ki.vA.jA has cited two verses from MuthoLLAyiram and KalingathupparaNi that reflect a maidens’ thoughts similarly.

“See nothing but his faults when he is away
 See no faults of his when I am in his sway”

இன்றெனது குறள்:

காண்பேன்நான் குற்றமே காணாக்கால் காண்கையில்
காண்பதில்லை குற்றமொன் றும்

kANbEnnAn kuRRamE kANAkkAl kANkayil
kANbadillai kuRRamon Rum

நவம்பர் 01, 2015

அன்றைய கருத்தும் இன்றைய காட்சியும் -7

வீதிவழியே வந்த இளம் பெண்ணின் அழகிலே தனையிழந்து அவளைப் பலவாறாகப் பாராட்டி, தன்னுடைய பேச்சாலே கவரப்பார்க்கிறானாம் ஓரிளைஞன்! காலம் காலமாக இளைஞர் செய்வதும், கதைகளும், கவிதைகளும், திரைச்சித்திரங்களும் வற்றாத கருக்களமாக கொள்வதும் இதுதானே.. கலித்தொகையில் குறிஞ்சி நில இளைஞன் கூற்றாக இவ்வாறு கபிலர் சொல்லுகிறார். இது நெடும்பாடல், அதில் இறுதி சில வரிகள் இங்கே தரப்படுகின்றன.

நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதரவிட்ட நுமரும் தவறு இலர்
நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு
பறை அறைந்தல்லது செல்லற்க என்னா
இறையே தவறு உடையான்
 கபிலர். கலித். 56 : 30 – 34

அழகியே! உனைக்கண்டு இங்கு இளைஞர் கூட்டம் பித்துபிடித்து அலைகிறது..அந்த வேதனை புரியாமல் நீ ஒன்றும் சொல்லாமல் போகிறாயே!. அது எங்களை மேலும் கொல்கிறதே! ஆனால், உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. உன் பெற்றோரைச் சொல்லியும் குற்றமில்லை. மதயானை நீராடப்போவதை முரசறைந்து அறிவிக்கும் அரசன் நீ வெளியே வருவதை சொல்லாமல் விட்டானே.. இது அவனது குற்றமே! என்கிறான் அந்த இளைஞன். 

எப்படியாவது எதையாவது சொல்லி, தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தைத் திருட விரும்பும் ஒவ்வொரு இளைஞனும் செய்வதுதான்!  இன்றைய இளைஞன் இதையே எவ்வாறு சொல்லலாம் என்றால், இதோ இப்படி…

உன்குற்றம் அன்றே வெளியே செலவிடுத்த
உன்பெற்றோர் குற்றமும் அன்றென்பேன் - தன்முரசைக்
கொட்டி மதயானை நீராடும் செய்திபோல்
சுட்டாவேந் தின்குற்ற மே

வேந்தனுக்கு எங்கே போவார்கள்.. வேண்டுமானால் அப்படிப்பட்ட அழகியைப் பற்றி செய்தியாகப் போடாத செய்தித்தாள் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

உன்குற்றம் அன்றே வெளியே செலவிடுத்த
உன்பெற்றோர் குற்றமும் அன்றென்பேன் - தன்னேட்டில்
முன்பக்கச் செய்தியாகப் போடாத ஆசிரிய
ரின்மலை போல்குற்ற மே!

இன்றைய இளைஞர் இதையெல்லாம் இன்னும் கொச்சையாக இச்சையைக் கொட்டிச் சொல்லுகிறார்கள். நயமும் இல்லை! நாகரீகமும் இல்லை என்பதே உண்மை. 


இந்த காலத்தில், இப்படிப் பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவதை ஈவ்-டீசிங் என்றே கூறுவார்கள். இலக்கியக்காலக் காதலில் ஈவ் டீசிங் என்பது கூட கண்ணியமாக கருதப்பட்டது போலும்..!

குறளின் குரல் - 1291

1st Nov, 2015

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

                           (குறள் 1285: புணர்ச்சிவிதும்பல் அதிகாரம்)

எழுதுங்கால் - விழியில் அஞ்சனம் தீட்டும்போது
கோல்காணாக் - தீட்டுங்கோலைக் காணாத
கண்ணேபோல் - கண்களைப்போல்
கொண்கன் - கணவரிடத்தில்
பழிகாணேன் - ஒரு குற்றமும் பார்க்கமுடியவில்லை
கண்ட இடத்து - அவனை அருகில் கண்டபோது.

பெண்கள் கண்ணுக்கு அஞ்சனம் தீட்டும்போது, தீட்டுகின்ற கோலைக் கண்களால் காணமுடியாது! ஏனெனில் அவை அவ்வளவு அருகில் இருக்கும். அதேபோல் கணவன் அருகிலிருக்கும்போது அவனுடைய குற்றங்களை நான் காணமுடிவதில்லை என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள். மைதீட்டும் கோலை கணவனின் குற்றங்களுக்கு ஒப்பாக கூறுவது மைதீட்டும் கோலின் கருமையை ஒட்டியே இருக்கவேண்டும். குற்றங்களை கருப்போடு ஒப்பிடுதல் சரிதானே.

புருவம் தீட்டுதலும், கண்ணுக்கு மையெழுதுதலும் சங்ககாலமோ அதற்கு முன்பிருந்தோ இருந்து வரும் பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ளும் வழிகள்தாம் போலும்.

Transliteration:

ezhudunkAl kOlkANAk kaNNEpOl koNkan
pazhikANEn kaNDa iDattu

ezhudunkAl – When black pigment is applied to eyes
kOlkANAk  not seeing the stick that applies
kaNNEpOl – like eyes (that do not see the applying stick)
koNkan - husband
pazhikANEn – his faults, I would not be able to see
kaNDa iDattu – when I see him in proximity.

When girls apply the blag pigment to their eyes to beautify them, they cannot see the stick that applies, because the stick is working on the eyes. Likewise, when my husband is in such close proximity, I would not be able to see his faults, says the maiden to her friend. Since the stick that applies the pigment would be black, its’ comparison to the faults of the husband seems right.

It seems, shaping of eyebrows and applying black pigment have been in existence as beautifying methods for women since the times of Sangam period or even before that.

Like the eyes would not see the stick that applies pigment
So, am I, when proximity, do not see faults of my husband”

இன்றெனது குறள்:

விழிதீட்டும் கோல்காணா கண்போல் கணவன்
பழிகாணாள் பார்க்கின்ற போது

vizhitiTTum kOlkANA kaNpOl kaNavan
pazhikANAL pArkkinRa pOdu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...