செப்டம்பர் 27, 2017

குறளின் குரல் – குறளெண் – 636

27th Sep 2017

(இக்குறள் எப்படியோ முதலில் எழுதுகையில் விடுபட்டுப் போனது! இம்முயற்சியைப் படித்துவந்த ஒரு அன்பர் சுட்டலில் இன்று இடப்படுகிறது! இதுபோன்ற விடுபட்ட குறட்பாக்கள் எத்தனையோ.. நான் இவற்றை மீண்டும் படித்து சரிசெய்யும் முயற்சியிலிருக்கிறேன்.. ஒரு ஆறுமாதங்கள் கூட ஆகலாம்)

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
                            (குறள் 637: அமைச்சு அதிகாரம்)

மதிநுட்பம் - நுண்ணறிவும்
நூலோடு உடையார்க்கு - பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த அறிவும் உடையவர்க்கு
அதிநுட்பம் - மிகுந்த நுட்பமாக மாற்றார் (பகைவர்) செய்யும் சூழ்ச்சி மிகுந்த செயல்கள்
யாவுள - எவை இருக்க முடியும்?
முன் நிற்பவை - அவற்றுக்கு முன்பாக?

நுண்ணறிவும், பல நூல்களைக் கற்றுத் தேர்ந்த அறிவும் உடைய அமைச்சர்களின் அறிவுக்கு முன்னால் வெல்லக்கூடி நுட்பமான சூழ்ச்சியாளர்கள் எவருள்ளனர் என்பது இக்குறளின் பொருள். “அதினுட்பம்” என்றும் பொருள் கொண்டு, அதனின் நுட்பம் எவையுண்டு என்றும் பாடம் உண்டு.  இயற்கை அறிவோடு, நூற்படிப்பும் இணைந்தால் அதை வெல்லக்கூடிய நுண்ணறிவு எங்குண்டு என்றும் கூறுவர். கி.வா.ஜ அவர்களின் ஆராய்ச்சி உரையில், தோலாமொழித் தேவரின் சூளாமணி காப்பியத்திலிருந்து இரநூபுரச் சருக்கத்தில் வருமொருபாடலை ஒப்பு நோக்கிக் கூறுகிறார்.

ஒன்றுநன் றெனஉணர்ந் தொருவன் கொள்ளுமே
லன்றதன் றொருவனுக் கறிவு தோன்றுமே
நின்றதொன் றுண்டினி நீதி நூலினோ
டொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே.

ஒருவர் அறிவுக்கு நல்லென்று தோன்றியவொன்று, நல்லதன்று என்று பிறருக்குத் தோன்றலாம். ஆக ஒன்றை உறுதிபட அறிவதற்கு தன்னுடைய சுயவறிவு மட்டுமல்லாது, அறநூல்களை அறிந்த அறிஞர் மொழியின்வழி ஒழுகின் உலகானது ஒப்புக்கொள்ளும் என்பததன் கருத்தாம்.

Transliteration:

Matinutpam nUlODu uDaiyArkku atinuTpam
yAvuLa munniR pavai?

Matinutpam – Sharp and rational intellect
nUlODu uDaiyArkku – and learned from the choicest texts of knowledge
atinuTpam – (compared to their intellect), to win over such intellect with scheming
yAvuLa – what would be there? (the opponents, enemies)
Mun niRpavai? – to stand face to face

Before a minister of sharp and shrewd intellect who is further complete with the knowledge of learning from the choicest books on rule, law and justice, which enemy’s intellect can stand face to face? It does not necessarily mean enemy here! – “Which other sharper intellect can be there?” is the general question. In Ki.vA.jAs’ research publication, he refers to a poem from the “ChooLAmaNi”, one of the five major epics of (written by TholAmozhit tEvar), with a thought similar to this verse.

That poem says this: What seems right to a one intellectual may not be right to another. But to ascertain the right and stay away from wrong, one must not only go by the innate intellect, but the words of the learned scholars to guide; only such words of such an intellectual, will be accepted by the World.

“Which sharper intellect can surpass or stand before
 the combined innate intellect and scholastic score?”

இன்றெனது குறள்:
நூலோ டியைந்ததாம் நுண்ணியர்முன் நின்றிட

ஏலுவதாம் நுட்பமில்லை காண்

1 கருத்து:

  1. கற்றதெந்தன் கல்லாமை தன்னளவே போல்காமம்
    பற்றிடுநல் பைந்தொடியாள் மேல்
    Could you kindly let me know the number of this KuRaL? In my book it isn't there.

    பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...