ஜூலை 19, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -100

क्वणत्काञ्ची काञ्चीपुरमणिविपञ्चीलयझरी-
शिरःकम्पा कम्पावसतिरनुकम्पाजलनिधिः
घनश्यामा श्यामा कठिनकुचसीमा मनसि मे
मृगाक्षी कामाक्षी हरनटनसाक्षी विहरतात् १००॥

க்வணத்காஞ்சீ காஞ்சீபுரமணிவிபஞ்சீ லயரீ-
ஶிர:கம்பா கம்பாவஸதிரனுகம்பாஜலனிதி:
னஶ்யாமா ஶ்யாமா கடி²னகுசஸீமா மனஸி மே
ம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ ஹரநடனஸாக்ஷீ விஹரதாத் 100

ஒலிக்கின்ற ஒட்டியாணம் அணிந்தவளும், காஞ்சியில் மணிமய விபஞ்சி வீணையின் நாதத்தில் ஒன்றி தலையாட்டுபவளும், கம்பைவாசியும், கருணைக் கடலும், மேகம்போல் கருத்தவளும், இளமை மிக்கவளும், உறுதியான தனங்களுடையவளும், மான்விழி உடையவளும், அரன் நடனத்துக்கு சாட்சியாகவும் உள்ள காமாட்சி, என் மனத்தில் குடியிருக்கட்டும்

ஒலிக்காஞ்சி பூண்ட, ஒளிமணி வீணையில் ஒன்றியிறை
சலிக்கின்ற, கம்பைத் தடம்வாழ் கருணையின் சாகரமாய்
பொலிகரு காமாட்சி, போதகி, திண்குசள், பொன்மறிக்கண்
மலிந்தரன் கூத்ததன் மாசாட்சி, வாழ்க, மனத்திருந்தே!

ஒலிக்காஞ்சி-ஓசையிடும் இடையணி; ஒளிமணி-இரத்தினம்; இறை-சிரம்; சலிக்கின்ற-அசைக்கின்ற; தடம்-கரை; பொலி-செழி; போதகி-இளைஞி; திண்குசள்-உறுதியான தனங்களுள்ளவள்; மறி-மான்; மலி-மிகு; மா-பெரும்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


ஒலிக் காஞ்சி பூண்ட, ஒளி மணி வீணையில் ஒன்றி இறை சலிக்கின்ற, கம்பைத் தடம்வாழ் கருணையின் சாகரமாய் பொலி கரு காமாட்சி, போதகி, திண் குசள், பொன்மறிக்கண் மலிந்து அரன் கூத்ததன் மாசாட்சி, வாழ்க, மனத்திருந்தே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...