ஜூன் 05, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -57


अहन्ताख्या मत्कं कबलयति हा हन्त हरिणी
हठात्संविद्रूपं हरमहिषि सस्याङ्कुरमसौ
कटाक्षव्याक्षेपप्रकटहरिपाषाणपटलैः
इमामुच्चैरुच्चाटय झटिति कामाक्षि कृपया ५७॥

அஹந்தாக்²யா மத்கம் கப³லயதி ஹா ஹந்த ஹரிணீ
ஹடா²த்ஸம்வித்³ரூபம் ஹரமஹிஷி ஸஸ்யாங்குரமஸௌ
கடாக்ஷவ்யாக்ஷேபப்ரகடஹரிபாஷாணபடலை:
இமாமுச்சைருச்சாடய சடிதி காமாக்ஷி க்ருʼபயா 57

காமாட்சி! அரனரசி! அகந்தையாம் பெண் மான் என்னுடையதான அறிவுருவான பயிர் முளையை வலிந்து விழுங்குகிறது. இது வருத்தமே! இப்பெண்மானை உன் கடைக்கண் வீச்சாம் நீல இரத்தின கற்களின் வரிசையால், தயையுடன் சீக்கிரமே வெகு தூரத்திற்கு விரட்டுவாயாக!

அகந்தையாம் பெண்மான் அறிவுரு வாம்பயிர் அங்குரத்தை
மிகவலிந் தேதான் விழுங்குதல் வந்தி!  விலங்கினையுன்
முகக்கடைக் கண்கள் முழுநீலக் கற்கோவை முற்றிதயை
உகந்தர ராணி! உடன்தொலை காமாட்சி ஓட்டுவயே!

அங்குரம்-முளை; வலிந்து-பலவந்தமாய், வந்தி-வருத்தம்; விலங்கு-மான்; கோவை-வரிசை; தொலை-வெகுதூரம்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அகந்தையாம் பெண்மான் அறிவுருவாம் பயிர் அங்குரத்தை மிக வலிந்தே தான் விழுங்குதல் வந்தி!  விலங்கினை உன் முகக் கடைக்கண்கள் முழு நீலக் கற்கோவை முற்றி தயை உகந்து அரராணி! உடன் தொலை காமாட்சி ஓட்டுவயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...