மே 31, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 53

मनःस्तम्भं स्तम्भं गमयदुपकम्पं प्रणमतां
सदा लोलं नीलं चिकुरजितलोलम्बनिकरम्
गिरां दूरं स्मेरं धृतशशिकिशोरं पशुपतेः
दृशां योग्यं भोग्यं तुहिनगिरिभाग्यं विजयते ५३॥

மன:ஸ்தம்பம் ஸ்தம்பம் ³மயது³பகம்பம் ப்ரணமதாம்
ஸதா³ லோலம் நீலம் சிகுரஜித லோலம்ப³ நிகரம்
கி³ராம் தூ³ரம் ஸ்மேரம் த்ருʼதஶஶி கிஶோரம் பஶுபதே:
த்³ருʼஶாம் யோக்³யம் போக்³யம் துஹினகி³ரி பாக்³யம் விஜயதே 53

எப்போதும் விளையாடுவதும், கரு நீல நிறமுள்ளதும்,  கூந்தலழகால் வண்டின அழகை வென்றதும், வாக்கினுக்கு எட்டாத மகிமையுள்ளதும், அழகுள்ளதும், இளஞ்சந்திரனைத் தலையில் சூடியதும், பசுபதியின் கண்களுக்கு  உகந்த அனுபவப்பொருளும், பனிமலைக்குப் பாக்கியமுமான பொருளொன்று, வணங்குபவர்களின் இயக்கமற்று, உணர்விழந்த நிலையிலுள்ள மனங்களுக்கும் கம்பையருகிலுள்ள தூணாக விளங்குகிறது.

கருநீல வண்ணமும் கார்குழ லால்கட்கள் கார்செயித்த
வருணமும் வாக்கு மணுகா மகிமையும் வான்மதியை
சிரமேற்ற தும்சிவன் செங்கண்கட் கேற்றதும், சீதமலை
திருவும் துதிப்போர் திறமிலுள் ளின்கம்பைச் சீர்த்தறியே!

கார்-அழகு; கட்கள்-வண்டுகள்; வருணம்-அழகு; அணுகா-எட்டாத; செங்கண்-சிவந்த கண்கள்; சீதமலை-பனிமலை; திறம்-இயங்கு தன்மை; தறி-தூண்.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

கருநீல வண்ணமும் கார்குழலால் கட்கள் கார் செயித்த வருணமும் வாக்கும் அணுகா மகிமையும் வான் மதியை சிரமேற்றதும் சிவன் செங்கண்கட்கு ஏற்றதும், சீத மலை திருவும் துதிப்போர் திறம் இல் உள்ளின் கம்பைச் சீர்த் தறியே!


(மூககவியின் சொல் விளையாடலில், அவர் அம்மையெனும் பொருள் பற்றி அடுக்கியிருக்கும் பலவித உருவகங்களை கட்டுக்கள் நிறைந்த கட்டளை கலித்துறையில், நான்கு வரிக்குள் கொண்டுவருவது மிகவும் கடினமான ஒன்றாயினும், இப்பாடலும், மூல ஸ்லோகத்தை ஒட்டியே எழுதமுடிந்ததே அவளுடைய தயையன்றி, என்னுடைய ஒருவிதத் திறமையும் இல்லை!. இக்குறிப்பும் கூட எனக்கு நானே எழுதிக்கொண்டதுதான், பின் எப்போதாவது படிக்க நேர்ந்தால்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...