ஏப்ரல் 03, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 94

इन्धाने भववीतिहोत्रनिवहे कर्मौघचण्डानिल-
प्रौढिम्ना बहुलीकृते निपतितं सन्तापचिन्ताकुलम्
मातर्मां परिषिञ्च किंचिदमलैः पीयूषवर्षैरिव
श्रीकामाक्षि तव स्मितद्युतिकणैः शैशिर्यलीलाकरैः ९४॥

இந்தானே வ வீதிஹோத்ர நிவஹே கர்மௌகசண்டா³னில-
ப்ரௌடிம்னா ³ஹுலீக்ருʼதே நிபதிதம் ஸந்தாப சிந்தாகுலம்
மாதர்மாம் பரிஷிஞ்ச கிம்சித³மலை: பீயூஷவர்ஷை ரிவ
ஸ்ரீகாமாக்ஷி தவ ஸ்மித த்³யுதி கணை: ஶைஶிர்ய லீலாகரை: 94

தாயே! காமாக்ஷி! மாசில்லாதாவையும் , அமுதமழை போன்றதும், குளிர்ச்சிக்கு இருப்பிடமுமாமுன் புன்சிரிப்பின் ஒளிக்கூட்டங்களால்,  கருமக்கூட்டாம் பெருங்காற்றின் வேகத்தால், ஒளிர்வதும், மிக்கதுமாய வாழ்வெனும் நெருப்பின் கனல்களில் விழுந்து, தாப வெப்பத்தால், கவலையாலும் மனம் கலங்கியிருக்கும் என்னைச் சற்று நனைப்பாயே!

அமுத மழையாக ஆனதும், தண்ணிடம் ஆனமாசில்
சுமுகந கையிலென், சூழ்வினை யெல்வளி சூர்துடிப
தமுறும் மிகுந்த தணல்கனல் வாழ்வினின் தாபமதில்
குமுறுளத் தையீரம் கொண்டன்னை காமாட்சி, கூதலியே!

தண்ணிடம்- குளிர்வின் இடம்; மாசில்-நிர்மலம்; சுமுகநகை-இன்முக சிரிப்பு; சூழ்வினை-கருமக்கூட்டு; எல்வளி-பெருங்காற்று; சூர்-அச்சம்தரு; துடி-வேகம்; பதமுறும்-ஒளிரும்;  கூதலி-குளிர்செய்க!

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அமுத மழையாக ஆனதும், தண்ணிடம் ஆன மாசில் சுமுக நகையிலென், சூழ்வினை எல்வளி சூர்துடி பதமுறும் மிகுந்த தணல் கனல் வாழ்வினின் தாபமதில் குமுறுளத்தை ஈரம் கொண்டன்னை காமாட்சி, கூதலியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...