ஏப்ரல் 29, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 20

कलकलरणत्काञ्ची काञ्चीविभूषणमालिका
कचभरलसच्चन्द्रा चन्द्रावतंससधर्मिणी
कविकुलगिर: श्रावंश्रावं मिलत्पुलकांकुरा
विरचितशिरःकम्पा कम्पातटे जगदम्बिका २०॥

கலகலரணத் காஞ்சீ காஞ்சீ விபூஷண மாலிகா
கசபர லஸச்சந்த்³ரா சந்த்³ராவதம்ஸ ஸதர்மிணீ
கவிகுல கி³: ஶ்ராவம் ஶ்ராவம் மிலத்புலகாம்குரா
விரசிதஶிர: கம்பா கம்பாதடே ஜக³³பி³கா 20

परिशोभते/பரிஶோபதே என்றும் பாடமுண்டு.

ஒலிக்கும் ஒட்டியாணமுடையவளும்,  காஞ்சிக்கு அணியாம் மாலை போன்றவளும், கூந்தலில் விளங்கு சந்திரனை உடையவளும், சந்திரனை சிரத்தில் தரித்த பரம சிவன் மனையாளும், கவிகுலத்தின் கவிச்சொற்களைக் கேட்டுக் கேட்டு, மயிர்கூச்செடுத்தவளும், சிரக்கம்பம் (தலையாட்டிக் கொண்டு) செய்துகொண்டும் உலகன்னை கம்பைத் தடத்தில் விளங்குகிறாள்.

கலிக்கின்ற காஞ்சியள், காஞ்சியின் மாலையள், கார்முகிற்கூந்
தலின்மீதில் திங்கள் தரித்தாள், கலையணிந் தார்மனையாள்,
புலவோர் கவிக்குப் புளகம் அடைந்து, புனிதகம்பை
மலிநீர் தடத்தில், வரைப்பன்னை கம்மாட மாந்துவளே!

கலித்தல்-ஓலித்தல்; காஞ்சி-இடையாபரணம், காமாக்ஷியின் நகரம்; கார்முகில்-கருமேகம்; திங்கள்-சந்திரன்; கலை-பிறை; புலவோர்- கவிகுலம்; புளகம்-மயிர்கூச்சு; வரைப்பு-உலகு; கம்மாட-கம்+ஆட-தலையாடுமாறு (சிரக்கம்பம்); மாந்துதல்- இரசித்து அனுபவித்தல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

கலிக்கின்ற காஞ்சியள், காஞ்சியின் மாலையள், கார்முகிற் கூந்தலின் மீதில் திங்கள் தரித்தாள், கலையணிந்தார் மனையாள், புலவோர் கவிக்குப் புளகம் அடைந்து, புனிதகம்பை மலிநீர் தடத்தில், வரைப்பன்னை கம்மாட மாந்துவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...