ஏப்ரல் 26, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 17

आलोके मुखपङ्कजे दधती सौधाकरीं चातुरीं
चूडालंक्रियमाणपङ्कजवनीवैरागमप्रक्रिया
मुग्धस्मेरमुखी घन्सतनतटीमूर्च्छालमध्याञ्चिता
काञ्चीसीमनि कामिनी विजयते काचिज्जगन्मोहिनी १७॥

ஆலோகே முக² பங்கஜே ³தீ ஸௌதாகரீம் சாதுரீம்
சூடா³லம்க்ரியமாண பங்கஜவனீ வைராக³ம ப்ரக்ரியா
முக்³ஸ்மேரமுகீ² ன்ஸதனதடீ மூர்ச்சா²ல மத்யாஞ்சிதா
காஞ்சீ ஸீமனி காமினீ விஜயதே காசிஜ் ஜக³ன்மோஹினீ 17

பார்வையிலும், தாமரைப்போன்ற முகத்திலும்  சந்திரனழகை தரித்தவள், கூந்தலுக்கு ஒப்பனையாக, தாமரைக் காட்டுக்கு எதிரியாம் நிலவை சிரத்தில் அணியாகக் கொண்டவளும் அழகு புன்னகை முகமுள்ளவளும், கனத்த தனங்களுள்ளவளும், மிகவும் மெல்லிய இடையுடையவளும், உலகை மயக்கும்  ஒருவள் காஞ்சியின் எல்லையில் விளங்குகிறாள்.

பார்வை யமுதிலும், பன்ம முகத்திலும், பால்மதிப்பூண்,
கார்கூந்தற் கொப்பமாய் கஞ்ச வனத்துப்ப கைநிலவை
தார்சிரத் தேபூண், சவியாசத் தாள்சீர் தனமுடைத்தாள்,
பார்மாலாள் மெல்லரைப் பாவையள் காஞ்சியில் பாவுவளே!

பார்வையமுது-அமுதைப்போல் குளிர் பார்வை; பன்மம்-தாமரை; பால்மதி-வெண்மதி; ஒப்பம்-அலங்காரம்; கஞ்சம்-தாமரை; தார்-மலர்; சவி-அழகு; ஆசம்-நகை,முகம்; சீர்-கனம்; மால்-ஆசைகொள்ளும், மயங்கும்; அரை-இடை; பாவுதல்-பரவுதல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பார்வை அமுதிலும், பன்ம முகத்திலும், பால்மதிப்பூண், கார்கூந்தற்கு ஒப்பமாய் கஞ்ச வனத்துப்பகை நிலவை, தார் சிரத்தே பூண், சவி ஆசத்தாள், சீர்தனமுடைத்தாள், பார் மாலாள் மெல் அரைப் பாவையள் காஞ்சியில் பாவுவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...