பிப்ரவரி 24, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 56

सन्नामैकजुषा जनेन सुलभं संसूचयन्ती शनै-
रुत्तुङ्गस्य चिरादनुग्रहतरोरुत्पत्स्यमानं फलम्
प्राथम्येन विकस्वरा कुसुमवत्प्रागल्भ्यमभ्येयुषी
कामाक्षि स्मितचातुरी तव मम क्षेमंकरी कल्पताम् ५६॥

ஸன்நாமைகஜுஷா ஜனேன ஸுலபம் ஸம்ஸூசயந்தீ ஶனை-
ருத்துங்க³ஸ்ய சிராத³னுக்³ரஹதரோருத்பத்ஸ்யமானம் ²லம்
ப்ராத²ம்யேன விகஸ்வரா குஸுமவத்ப்ராக³ல்ப்யமப்யேயுஷீ
காமாக்ஷி ஸ்மித சாதுரீ தவ மம க்ஷேமம்கரீ கல்பதாம் 56

காமாக்ஷியே! நல்லோன் என்று பெயரடைந்த ஒருவனால் மட்டுமே எளிதில் அடையத்தக்கதும், நெடிதுயர்ந்து  வளர்ந்திருக்கும் அருளாட்டு என்னும் மரத்தில் வெகுநாட்களுக்குப் பிறகு தோன்றப்போகும் பழமாம் பயனை மெல்ல வெளிப்படுத்துவதும், முதன் முதலாக மலர்ந்ததுமான மலரினைப் போல பெருமிதமடைந்த உன் புன்சிரிப்பின் திறம் எனக்கும் நன்மை புரிவதாக ஆகட்டுமே!

நல்லவன் என்கின்ற நாமன் இலகுவாய் நள்ளுவதாம்,,
வல்லுயர் சாயல் மரப்பழச் சாரம்போல் வந்துதோன்றி
மெல்லவே காட்டுமாம், மென்மலர் பூத்து மிளிர்ந்திடுமுன்
நல்மூர லாற்றலால் நன்மையைக் காமாட்சீ நல்கெனக்கே!

நல்லவன்-சாது; நாமன்-பெயருடையவன்; இலகு-எளிது; நள்ளுதல்-கிடைத்தல்; வல் உயர்- வலிய, உயர்ந்த; சாயல்-அருள்; சாரம்-பயன்; மிளிர்தல்-பெருமையுடைத்தல்; நல் மூரல்- நல்ல முறுவல்;  ஆற்றம்-திறம்; நல்கு- தருக

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


நல்லவன் என்கின்ற நாமன் இலகுவாய் நள்ளுவதாம், வல்லுயர் சாயல் மரப்பழச் சாரம்போல் வந்துதோன்றி மெல்லவே காட்டுமாம், மென்மலர் பூத்து மிளிர்ந்திடுமுன், நல் மூரலாற்றலால் நன்மையைக் காமாட்சீ நல்கெனக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...