டிசம்பர் 01, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 74

परस्मात्सर्वस्मादपि परयोर्मुक्तिकरयोः
नखश्रीभिर्ज्योत्स्नाकलिततुलयोस्ताम्रतलयोः
निलीये कामाक्ष्या निगमनुतयोर्नाकिनतयोः
निरस्तप्रोन्मीलन्नलिनमदयोरेव पदयोः ७४॥

பரஸ்மாத் ஸர்வஸ்மாத³பி ச பரயோர் முக்தி கரயோ:
நக² ஸ்ரீபிர் ஜ்யோத்ஸ்னா கலித துலயோஸ் தாம்ர தலயோ:
நிலீயே காமாக்ஷ்யா நிக³ம நுதயோர் நாகி நதயோ:
நிரஸ்த ப்ரோன்மீலன் நளின மத³யோரேவ பத³யோ: 74

சிறந்தவையும், அனைத்திலும் உயர்ந்தவையும், முக்தி தருபவையும், நகவொளியால் நிலவை ஒத்தவையும், தாமிர நிறமாம் சிவந்த அடித்தளம் (பாதங்கள்) கொண்டதும், வேதங்களால் துதிக்கப்பெற்றதும், தேவர்களால் வணங்கப்பெற்றதும், மலர்ந்த தாமரைகளின் செருக்கை விரட்டவல்லதுமாம், காமாக்ஷியின் பாதங்களில் இலயமுறுகிறேன்.

சிறந்த தனைத்தில் சிறந்ததும் முக்தியைச் சிந்துவதும்
நிறமதில் செம்பாய் நிறைந்த கழல்களால் நின்றதுவும்,
மறைகள் துதித்திட வானோர் வணங்கும் மலர்மரைகள்
விறைப்பகற் றும்சே வடியில்கா மாட்சி! விரவுவனே!


சிந்துவது-தெளிப்பது; மரை-தாமரை; விறைப்பு-செருக்கு; விரவுதல்-ஒன்று சேருதல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...