நவம்பர் 25, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 67

नखांशुप्राचुर्यप्रसृमरमरालालिधमहित:
स्फुरन्मञ्जीरोद्यन्मरकतमहश्शैवलयुतः
भवत्याः कामाक्षि स्फुटचरणपाटल्यकपटो
नदः शोणाभिख्यो नगपतितनूजे विजयते ६७॥

நகா²ம்ு ப்ராசுர்ய ப்ரஸ்ருமர மராலாலிதமஹித2:  
ஸ்பு²ரன் மஞ்ஜீரோத்³யன் மரகத மஹைவல யுத:
வத்யா: காமாக்ஷி ஸ்பு²ட சரண பாடல்ய கபடோ
நத:³ ோணாபிக்²யோ நக³ பதி தனூஜே! விஜயதே 67

மலையரசன் மகளே! காமாக்ஷி! உன்னழகு பாதங்களின் செவ்வொளியாம் சோணை என்னும் நதம் (ஆண் ஆறு), மிகு நகவொளியாம் அன்னப் பறவைகள் நிரம்பி, ஒளிச் சிலம்புகளிலுள்ள மரகதக் கற்களின் காந்தியெனும் பாசி படர்ந்து விளங்குகிறது. (கிழக்கில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் நதம் என்று அழைக்கப்படும். உம்: பிரம்மபுத்திரா)

சிவந்த ஒளிகொள்நின் சேவடி சோணைத் திரைநதத்தில்
சவியுகிர் அன்னச் சகுந்தங்கள் ஆற்றவும், சாய்சிலம்புள்
உவந்த மரகத ஒண்மணி நாரம் உராவிநன்கு,
சிவையே! மலைமன்னன் செல்வமே காமாட்சீ சீருறுமே!


சேவடி-சேவிக்கும் பதங்கள்;  திரை-அலை; நதம்-ஆண் ஆறு;  சவி-ஒளி; உகிர்-நகம்; சகுந்தங்கள்-பறவை; ஆற்ற-மிக; சாய்-ஒளிர்; நாரம்-பாசி; உராவி-பரவி; சிவை-பார்வதி;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...