நவம்பர் 24, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 66

दधानो मन्दारस्तबकपरिपाटीं नखरुचा
वहन्दीप्ता: शोणाङ्गुलि भिरपिचाम्पेयकलिका:।
अशोकोल्लासं नः प्रचुरयतु कामाक्षि चरणो
विकासी वासन्तः समय इव ते शर्वदयिते ६६॥

³தானோ மந்தா³ர ஸ்தப³க பரிபாடீம் நக² ருசா
வஹந் தீ³ப்தா: ோணாங்கு³லிபடல சாம்பேய கலிகா:
ோகோல்லாஸம் ந: ப்ரசுரயது காமாக்ஷி! சரணோ
விகாஸீ வாஸந்த: ஸமய இவ தே ர்வ த³யிதே 66

பரமசிவர்க்கு இனியவளே! காமாக்ஷீ! நகவொளியால் மந்தார மலர்களின் அழகை விளக்குவதும், சிவந்த விரல்களின் வரிசையால் ஒளிரும் சம்பக மொட்டுக்களைப் போலிருப்பதுமாம் உன் பாதங்கள் வசந்த காலத்தைப்போல், அசோக மரத்தின் மலர்ச்சியை (சோகமின்மையை/மகிழ்ச்சியை) எம்மில் பரவச் செய்யட்டும்

சிவனார்க் கினியாளே! தேவிகா மாட்சி! செடிநகங்கள்
கவின்மலர் மந்தாரக் காந்தி விளக்கசே கைவிரல்கள்
சவியணி சம்பக சாலம்போ லாமுன்றன் தாளிணைகள்,
உவந்து வசந்தத்தின் ஊழசோ கம்போல் உராவுகவே!


செடி-ஒளி; சேகை-சிவப்பு; சவி-ஒளிர்; அணி-வரிசை; சாலம்-மொட்டு; ஊழ்-மலர்தல்; உராவு-பரவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...