நவம்பர் 02, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 44

गिरां दूरौ चोरौ जडिमतिमिराणां कृतजग
त्परित्राणौ शोणौ मुनिहृदयलीलैकनिपुणौ
नखैः स्मेरौ सारौ निगमवचसां खण्डितभव-
ग्रहोन्मादौ पादौ मम मनसि कामाक्षि कलये ४४॥

கி³ராம் தூ³ரௌ சோரௌ ஜடி³ம திமிராணாம் க்ருʼதஜக³த்
பரித்ராணௌ ோணௌ முனி ஹ்ருʼ³ய லீலைக நிபுணௌ
நகை:² ஸ்மேரௌ ஸாரௌ நிக³ம வசஸாம் க²ண்டி³தபவ-
க்³ரஹோன்மாதௌ³ பாதௌ³ மம மனஸி காமாக்ஷி கலயே 44

சொற்களுக்கெட்டாதவையும், அறியாமையிருளை போக்குவதும், சிவந்ததும், உலகைக் காப்பதும், முனிவர்தம் உளங்களில் விளையாடுவதில் தேர்ந்தவையும், நகவொளியால் சிரிப்பவையும், வேதவாக்கியங்களின் உட்பொருளாவதும், பிறவியெனும் தீக்கோளின் சேட்டைகளை கண்டிப்பவையும், ஆய நின் பாதங்களை மனத்திருத்தினேன் காமாக்ஷியே!

சொற்களுக் கெட்டாத, தொள்ளை யிருளை தொலைத்துசெம்மை,
பற்றிபூ வைக்காக்கும், பற்றிலார் உள்ளம் பரவிகேளீ
முற்றும், நகங்களால் மூரலிக் கும்வேத முட்பொருளை,
பற்றுமுள், காமாட்சீ பாழ்பவக் கோள்தீய்க்குன் பாதயீரே!

தொள்ளை-அறியாமை; பூ-உலகு; பற்றிலார்-முனிவர்; கேளீ-விளையாட்டு;  முற்றும்-பக்குவமாகித் தேர்தல்; மூரலித்தல்-நகைத்தல்; பவக்கோள்-பிறவியெனும் தீயகிரகம்;


[குறிப்பு: நிறைய செய்திகளைச் சொல்லியிருக்கும் இந்த ஸ்லோகம், கட்டளைக் கலித்துறை கட்டுக்குள் அமைவது கடினமேயாயினும், கூடியவரைக்கும், கருத்தை மாற்றாது சொல்லவைத்ததும் அவளருளே என்று நினைக்கிறேன்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...