அக்டோபர் 30, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 41

प्रचण्डार्तिक्षोभप्रमथनकृते प्रातिभसरित्
प्रवाहप्रोद्दण्डीकरणजलदाय प्रणमताम्
प्रदीपाय प्रौढे भवतमसि कामाक्षि चरण-
प्रसादौन्मुख्याय स्पृहयति जनोऽयं जननि ते ४१॥

ப்ரசண்டா³ர்தி க்ஷோபப்ரமத²னக்ருʼதே ப்ராதிபஸரித்-
ப்ரவாஹ ப்ரோத்³³ண்டீ³ கரண ஜலதா³ய ப்ரணமதாம்
ப்ரதீ³பாய ப்ரௌடேவ தமஸி காமாக்ஷி சரண-
ப்ரஸாதௌ³ன் முக்²யாய ஸ்ப்ருʼஹயதி ஜனோயம் ஜனனி தே 41

தாயே, காமாக்ஷீ! தொழுபவர்தம் கொடுந்துயரத்தின் கலக்கத்தை அழிக்க வல்லவையும், அறிவாற்றல் என்னும் ஆற்றின் வெள்ளத்தை மிகச் செய்யும் மேகம் போன்றதும், பிறந்திறக்கும் இருளில் ஒளியுமான உன் திருவடிகளின் அருளை நான் அடைய விரும்புகிறேன்.

தொழுவோர், கொடும்துயர் தூண்டும் கலக்கம், தொலைக்கவல்ல,
விழுமிய ஒட்ப மெனுமாற்றை வெள்ளஞ்செய் மேகமான,
உழல்பவ அல்லில் உதிக்கும் ஒளியாமுன் ஒண்கழல்கள்
தொழுமருள், தாயே! துயக்கமே, காமாட்சீ! தோன்றிடுதே!  


தொழுவோர்-வணங்குவோர்; கலக்கம்-மனக்குமுறல்; விழுமிய-சிறந்த; ஒட்பம்-அறிவு; தொழுவதல்; உழல்பவ-அலைக்குமிவ் வாழ்வு; அல்-இருட்டு; துயக்கம்-பந்தம்/ஆசை;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...