மே 27, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 87

प्रणतजनतापवर्गा कृतबहुसर्गा ससिंहसंसर्गा
कामाक्षि मुदितभर्गा हतरिपुवर्गा त्वमेव सा दुर्गा 87

ப்ரணத ஜனதாபவர்கா க்ருதபஹுஸர்கா ஸஸிம்ஹ ஸம்ஸர்கா |
காமாக்ஷி முதித பர்கா ஹதரிபுவர்கா த்வமேவ ஸா துர்கா ||87||

காமாட்சியே! தன்னை வணங்குபவர்களுக்கு முத்தியளிப்பவளும், பலவுயிரினங்களையும் படைத்தவளும், சிங்கத்துடன் இருப்பவளும், பரமசிவனை மகிழ்விப்பளும், பகைவரை அழிப்பவளுமான துர்கை வடிவினளும் நீதான்! “பஹீஸர்கா” விற்கு மாற்றாக,  “ரணசர்கா” என்றும் பாடமுண்டு. அது “போரில் விருப்பமுள்ளவள்” என்றாகும். அம்பிகை போர் புரிவது தீமையை ஒழிக்கமட்டுமே! போரில் விருப்பமுள்ளவள் என்பது சற்று பொருந்தாதவொன்றே!

வணங்கிடு மன்பர்க்கு வானுறை முக்தி வழங்கிடுவாய்;
கணக்கில் உயிர்களும் காமாட் சியுன்படைப்பே! கான்சிங்கம்
இணங்கி உடனே இருக்கும்; மகிழ்விப்பாய் ஈசனையும்;
அணங்கே பகையழி அன்னைதுர்கை யும்நீ அறிந்தோமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...