செப்டம்பர் 24, 2015

குறளின் குரல் - 1253

24th Sep, 2015

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
                           (குறள் 1247: நெஞ்சொடு கிளத்தல் அதிகாரம்)

காமம் விடு ஒன்றோ - ஒன்று காமத்தைக் கைவிடு
நாண் விடு - அல்லது நாணத்தையாவது கைவிடு
நன்னெஞ்சே - ஒரு சரியாக விகிதத்தில் இரண்டையும் காக்கும் நல்ல உள்ளமே
யானோ பொறேன் - என்னால் பொறுக்கமுடியாது
இவ்விரண்டு - இவ்விரண்டின் இடையிலும் அகப்பட்டு

மோகத்தைக்  கொன்றுவிடு - அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு” என்று பின்னாளில் பாரதி பராசக்தியைக் கேட்டார். இப்பாடலில், காதலில் ஆழ்பட்ட காதற்தலைவி, தன்னெஞ்சை இறைஞ்சுகிறாள், ஒன்று தன்னுடைய காமத்தையாவது அல்லது காமத்துக்குத் தடையாயிருக்கிற நாணத்தையாவது கைவிடவேண்டுமென்று. நாணமும் காமமும் நீரும் நெருப்பும் போன்றன. காமம் நெருப்பாய் காயும்; நாணமோ அதை அவித்துவிடும். நாண நீர் குறைவாக இருப்பின் காம நெருப்பில் வற்றிவிடும். நெஞ்சமோ இரண்டையும் சரியான அளவில் வைத்த்து என் பெண்மையைக் காக்கிறது. இதை என்னால் பொறுக்க முடியவில்லை. ஏதாவது ஒன்றைமட்டு எனக்குக் கொடு என்கிறாள்.

அவள் வேண்டுவதைப் பார்த்தால் காமமே மிக்கிருக்கவேண்டும். ஆயின் நாணமோ அதைத் தடுக்கக் கூடிய அளவில் இருக்கவேண்டும். அத்தடையை நீக்கச் சொல்லியே வேண்டுவதாகத் தோன்றுகிறது.  குறுந்தொகைப் பாலைத்திணைப் பாடலொன்றில் காதற்தலைவி நாணம் தம்மை நெடுங்காலம் உடனிருந்து வருத்தியதையும், இனிமேல் காமம் மேலும் நெருங்க அது இல்லாது போய்விடும் என்பது வருந்தத்தக்கது என்கிறாள். அப்பாடல் இங்கே:

அளிதோ தானே நாணே நம்மொடு 
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே 
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை 
தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத் 
தாங்கு மளவைத் தாங்கிக் 
காம நெரிதரக் கைந்நில் லாதே. 

Transliteration:

kAmam viDuonRO nANviDu nannenjE
yAnO poREniv viraNDu

kAmam viDu onRO – Either let go off lust
nAN viDu – or left go my honour
nannenjE – my good heart protecting both in right proportion
yAnO poREn – I can’t bear that.
iv viraNDu – caught in between

Bharati requested almost two thousand years later, to the mother Goddess. “Either klll my lust or stop my breathing”. In this verse, the maiden requests her good heart that has kept both in balance so that her dignity would be kept to let off either lust or the honour.  Lust and honor are like fire and water. Unless they are in balace, whichever is predominant, would quell the other.

Her request shows that she is more inclined to let off honour for the sake of satisifying her lust as she is suffers the departure of her lover and pines his absence. A poem from Kuruntogai, shows a maiden who states that her honor was saving her all these days; but the lust is slowly inching its way to drive that and make her honor driven away.

“Either rid me off my honor or lust, O! My heart
 I cannot endure the pain with both being part”


இன்றெனது  குறள்:

காமமோ நாணமோ இவ்விரண்டில் ஒன்றைத்தள்
ஏமமன்றே இவ்விரண்டும் சேர்ந்து

kAmamO nANamO ivviraNDil onRaittan
EmamanRE ivviraNdum chErndu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...