ஆகஸ்ட் 26, 2015

குறளின் குரல் - 1224

26th Aug, 2015

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
                           (குறள் 1218: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)

துஞ்சுங்கால் - உறங்கும்போது
தோள்மேலர் ஆகி - என் தோள்மேல் சாய்ந்திருப்பவர் (கனவில்)
விழிக்குங்கால் - நான் விழித்துக்கொள்ளும்போது
நெஞ்சத்தர் ஆவர் - என் நெஞ்சுக்குள்ளே சென்றுவிடுகிறார்
விரைந்து - மிகவும் விரைவாக.

காதற் தலைவிக்கு ஆறுதல் கூற விழையும் தோழி காதற்தலைவனைப் பழிக்க, காதற் தலைவி இவ்வாறு கூறுவாளாயினள். நான் உறங்குகையில் கனவிலே என் தோளணைந்து முயங்கியவர், பின்பு விழிக்கும்போது எங்கும் செல்லவில்லை; என்னுடைய நெஞ்சத்துக்குள் விரைவாகச் சென்றுவிடுவார். எப்போதும் என்னை நீங்கிச் செல்லமாட்டார், ஆதலில் அவரை பழிக்காதிருப்பாயாக என்று தோழிக்கு உணர்த்துகிறாள்.

கனவில் தோள்மேலராவதையும், விழிப்பில் நெஞ்சத்தவராவதையும் கலித்தொகை வரிகள் கூறுவதையும் பார்க்கலாம்.

“பாயல்கொண் டென்தோள் கனவுவார்” (கலி: 24:7) (பாயல் - உறக்கம்)

“தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமைஎடுத்துப்
பற்றுவேன் என்றுயான் விழிக்குங்கால் மற்றுமென்
நெஞ்சத்துள் ஓடி ஒளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யும் அறனில் லவன்” (கலி:144:55-8)

Transliteration:

tunjungAl tOlmElar Agi vizhikkungAl
nenjattar Avar viraindu

tunjungAl – while sleeping
tOlmElar Agi – leaning on my shoulders in embrace (in dreams)
vizhikkungAl – after woken up
nenjattar Avar – in my heart he goes in
viraindu – quickly.

In order to console the maiden about her lover being away, her friend speaks ill of him; but the maiden says, her lover that leans on her shoulders in her dreams, while sleeping, gets into her heart quickly after she has woken up and that he would never leave her; and hence not to speak ill of his being away.

Verses 24:7 and 144:55 of Kalithogai speak of similar thinking from a maiden.

“He that leans on my shoulders in my dreams while asleep
 gets into my heart very quickly when awake, like a creep”


இன்றெனது  குறள்:

உறக்கத்தில் தோள்சாய்ந்து பின்விழிப்பில் நெஞ்சத்
துறக்கத்தில் சேர்வார் விரைந்து

(துறக்கம் - சுவர்க்கம்)

uRakkattil tOLsAindu pinvizhippil nenjat
tuRakkattil sErvAr viraindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...