ஆகஸ்ட் 25, 2015

குறளின் குரல் - 1223

25th Aug, 2015

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
                           (குறள் 1217: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)

நனவினால் - நான் விழித்திருக்கையிலே
நல்காக் - எனக்கு வந்து தம்மன்பை தராத
கொடியார் - வன்னெஞ்சினரான காதலர்.
கனவனால் - என்னுடைய கனவில் வந்து
என் எம்மைப் - எதற்காக என்னை
பீழிப்பது - வருத்தி துன்பம் தருகிறார்?

இக்குறளில் பிறிவாற்றமையில் இருக்கும் காதற்தலைவி, தன் காதலர் கனவில் மட்டும் வந்து வருத்துவதை நொந்து, “ஈதென்ன, நான் விழித்திருக்கையில் வந்து எனக்கன்பைத் தராத கொடும் நெஞ்சினரான என்னுடைய காதலர், இப்போது கனவிலே மட்டும் வந்து இப்படி நான் வருந்த துன்பம் தருகிறாரே“ என்று அலுத்துக்கொள்கிறாள்

Transliteration:

nanavinAl nalgAk koDiyAr kanavanAl
enemmaip pIzhi padu

nanavinAl – When I am wakeful
nalgAk – not showing his kindness and compassion
koDiyAr – the hard-hearted lover
kanavanAl – appearing in my dream
en emmaip – why to me?
pIzhipadu – give pain and misery?

The maiden that laments her lover being away, says, “What is this? When I am awake, my lover does not come and show is love and kindness; when then he appears now in my dream and inflicts pain and misery?

“That who does not show his loving compassion while awake,
 In my dreams he appears and gives me misery, for what sake?”


இன்றெனது  குறள்:

விழிப்பில் வராதவன் னெஞ்சர் கனவில்
கழித்துன்பத் தாழ்த்துவ தென்?

Vizhippil varAdavan nenjar kanavil
Kazhittunbat tAzhtuva then?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...