ஜூலை 30, 2015

குறளின் குரல் - 1197

120: (Solitary Anguish - தனிப்படர் மிகுதி)

[In this chapter, the maiden realizes that her lover has to be away from her for earning as well as stand stead by the ethical codes of life by being useful to the family and the society around him as a man is supposed to. She also realizes that losing luster is also possible for him, as he would miss her as much as she does miss him. She says how she would make his solitary pain of separation go away, when he is back. Though VaLLuvar makes the solitary anguish common to both, he says both mostly from the perspective maiden, in this chapter too]

30th Jul, 2015

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
                           (குறள் 1191: தனிப்படர் மிகுதி அதிகாரம்)

தாம் வீழ்வார் - என்மேல் காதலில் வீழ்ந்தவர்
தம்வீழப் பெற்றவர் - என்னாலும் மிகவும் காதலிக்கப்படும் என் அன்பர்
பெற்றாரே - அக்காதலின் கனியாகப் பெற்றார் (நீங்கிச் சென்று மீளுகையில்)
காமத்துக் - இன்ப நுகற்சியை
காழில் - விதையில்லாச்
கனி - சதைப் பழம்போல

என்னைக் காதலிக்கும் என் அன்பர், என்னாலும் மிகவும் காதலிக்கப்படுபவர், பசலையே எனக்குத் தான் நீங்கித் தந்தாலும், பொருளீட்டவும், அறம் செய்யவுமே சென்றிருக்கிறார். அவர் மீண்டு வரும்போது, இன்பநுகற்சியை கொட்டையே இல்லாத அருஞ்சுவைக் கனிபோல் என்னிடமிருந்து பெறுவார் என்கிறாள் காதற் தலைவி.

காதல் என்பது காதல் நீங்கிச் சென்றதற்கு நோவதுமட்டுமல்ல! சரியான காரணத்துக்காக என்ற புரிதலும், அத்தகைய காதலனுக்கு தாம் என்ன தருவோம், பிரதியாக என்கிற சிந்தனையும் என்பதைச் சொல்லும் குறள்.

Transliterartion:

tAmvIshvAr tamvIzahp peRRavar peRRArE
kAmattuk kAzhil kani

tAm vIshvAr – He, that fell in love with me
tamvIzahp peRRavar – and also deeply loved by me
peRRArE – has got
kAmattuk – the conjugal pleasure
kAzhil – (like a) seedless
kani – fruit.

Mu beloved, who loves me so dearly, and who is loved by me also equally, will get the fruit of conjugal pleasure, that too seedless. The maiden, though suffers in “pachalai/pasalai”, understands that her beloved to has to separate from her on his work and his ethical duties to the household as well as to the society; she realizes that he has his own anguish pertinent to separation.

True love is not just feeling miserable for the loved one to leave for a valid reason; but being thoughtful of what can be given in return for a lover of such demeanor.

“That who’s fallen for me, I’ve fallen for has got
 Conjugal pleasure from me like a seedless fruit”


இன்றெனது  குறள்:

எனைக்காத லிக்குமென் அன்பர் சுவைப்பார்
எனைவிதை யில்பழம்போ லுண்டு

enaikkAda likkumen anbar suvaippAr
enaividai yilpazhampOl luNDu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...