ஜூலை 29, 2015

குறளின் குரல் - 1196

29th Jul, 2015

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

பசப்பெனப் - நான் பசலையுற்றவள் என்று
பேர் பெறுதல் - பேரை ஊராரிடமிருந்து பெறுதல்
நன்றே - நல்லதே
நயப்பித்தார் - என்னைத் தன்பிரிவுக்கு உடன் படச் செய்தார்
நல்காமை - என் மீது அன்பை அருளாமையை
தூற்றார் எனின் - ஊரார் தூற்றார் என்றால்

என்னைத் தன்பிரிவுக்கு உடன்படச் செய்து தான் நீங்கி எனக்கு துன்பமே தந்தாலும், அதன் காரணமாக என் அன்பரை, அன்பு நல்காதவர் என்று ஊரார் பழி தூற்றுதலிலும், இவள் பசலை வயப்பட்டாள் என்று பலர் அறிய நேர்தல் நன்றே என்கிறாள் காதற் தலைவி.

பெண்ணை ஒரு ஆணின் அன்புக்காக ஏங்குபவளாக, ஒரு மனவலியற்றவளாக சித்தரிப்பது வள்ளுவர் கால சிந்தனையாக இருப்பினும், நிகழ் கால பெண்ணியக்கச் சிந்தனைக்கு ஒவ்வாததாகவே இருக்கிறது.

Transliteration:

Pasappenap pErpeRudal nanRE nayappittAr
nalgAmai tURRAr enin

Pasappenap – that I have grown pale in hue
pEr peRudal – to get such tag by those that see me
nanRE – is better (than)
nayappittAr – my beloved who made me agree to his leaving me
nalgAmai – his lovelessness
tURRAr enin – is not blamed by all.

My lover who convinced me to agree to his leaving, though gave only pain, I don’t want the towns people to call him loveless; I would rather have them simply blame me for growing pale in hue, the maiden shows her compassion for her lover, despite growing pale.

Perhaps, to show women as weak and lacking strength in mind was the thought of VaLLuvars’ era. The present day thinking and realities are mostly on the opposite end of the spectrum only.

“It is better that I be blamed for growing pale, colorless
 than to tag him, that convinced me to leave, as loveless”


இன்றெனது  குறள்(கள்):

அன்பிலார் என்றுநீங்கச் செய்வித்தார் பேருறார்
எனின்பசப் பும்நன் றெனக்கு

anbilAr enRunIngach cheivittAr pERuRAr
eninpasap pumnan Renakku

நயப்பித்தார் அன்பின்மை தூற்றப் படலின்
வயந்தாள் பசப்பென்ப நன்று

nayappittAr anbinmai tURRap paDalin
vayandAL pasapenba nanRu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...