ஜூன் 02, 2015

குறளின் குரல் - 1139

2nd Jun, 2015

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
                        (குறள் 1133: நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)

நாணொடு - இழிமைக்கு வெட்குதலும்
நல்லாண்மை - தளரா உறுதியோடு கூடிய ஆண்மையும்
பண்டுடையேன் - தொன்று தொட்டு இன்றுவரை கொண்டிருக்கிறேன்
இன்றுடையேன் - இன்று கொண்டிருக்கிறேன்
காமுற்றார் - காமம் கொண்டு இவற்றைத் துறப்போர்
ஏறும் மடல் - ஏறுகின்ற மடலூர்தலை

இழிமைக்கு வெட்குதலும், தளரா உறுதியோடு இருக்கக்கூடிய ஆண்மையும் என்னோடு தொன்று தொட்டு, எங்கள் குலச் சொத்தாகக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்றோ என்காதலிமேல் கொண்ட வேட்கைக் காரணமாக, காமநோய் உற்ற ஆண்களைப் போன்று பனை மடல் ஏறவும் செய்கிறேன் என்று ஆண்மகன் தன்னுடைய எப்போதுள்ள ஒழுக்கக் கூற்றினையும், இப்போது தற்காலிகமாக உள்ள காமவேட்கை அவத்தையும் கூறுகிறான். “பண்டு உடையேன்” என்றதால் முன்னாள் முதல் இந்நாள் வரை அவ்வொழுக்கக்கூறுகள் இருந்துகொண்டே இருக்கின்றன என்பதும் புலனாகும்

Transliteration:

nANODu nallANmai paNDuDaiyEn inRuDaiyEn
kAmuRRAr ERum maDal

nANODu – Being modest (and shameful for demeaning conduct)
nallANmai – good manliness
paNDuDaiyEn – from the past have had
inRuDaiyEn – (but) today, I have
kAmuRRAr  lustful men
ERum maDal – climbing palmyra horse

To be shameful for demeaning conduct  (modest) and manliness have been with me from the time I have been a man or even have been with our lineage. But today for the love of my maiden, I am climbing the palmyra horse, like lustful do. In this verse, most commentators have interpreted, the word “paNDuDaiyEn” as a thing of past; but the word “uDaiyEn”, implies that he still has those traits left in him and also there is definitely a reason for it to be restored, once his maiden has accepted him.

“Modesty and Manilness have been with me for long
 Today, like lustful climbing palmyra horse, is my song“


இன்றெனது  குறள்:

வெட்கத்தோ டாண்மைநான் தொன்மையாய்ப் பெற்றுமின்றோ
உட்புகுகா மத்தால் மடல்

veTkattO DANmainAn thonmaiyAip peRRuminRO
uTpugukA mattAl maDal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...