ஜூன் 01, 2015

குறளின் குரல் - 1138

1st Jun, 2015

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
                        (குறள் 1132: நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)

நோனா - காதலியை பிரிந்த துன்பத்தில் வருந்தும்
உடம்பும் உயிரும் - உயிரோடு, உடலும்
மடலேறும் - பனைக்குதிரை ஏறுகிற
நாணினை - வெட்கத்தினை
நீக்கி நிறுத்து - தம்மிடத்திலிருந்து நீக்கி தள்ளி நிறுத்தி

காதலியைப் பிரிந்த ஆண்மகன், அவ்வருத்தத்தினைப் பொறுக்கவியலாது உடம்போடு, உயிரும் சேர்ந்தே மடலூர்தலைக் மேற்கொள்வான், அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய நாணத்தையும் விலக்கி தள்ளி நிறுத்தி!  மடலூர்தலை வெறும் புறகரணச் செயல்பாடாக மட்டும் கூறாது, உள்ளமும், உயிரும் ஈடுபடும் ஒரு செயலாகக் கூறுகிறார் வள்ளுவர் இக்குறளில்.  காமத்தினால் நாணம் நீங்குதலை “அறிவும்நம் அறிவாய்ந்த அடக்கமும் நாணொடு, வறிதாக” என்று கலித்தொகைச் சொல்லும். “காமம் கைம்மிகச் சிறத்தலின் நாணிழந்து” என்று அகநானூற்றுப் பாடலொன்று சொல்லும்.

Transliteration:

nOnA uDambum uyirum maDalERum
nANinai nIkki niRuttu

nOnA – Being separated from his lover
uDambum uyirum – with his body and soul
maDalERum – he would climb palmyra horse
nANinai – the shame
nIkki niRuttu – being rid of it by keeping out him

Separated from lover-maiden, not able to bear the same, with his body and soul, the man would venture to ride palmyra-horse, which requireds being rid of shame in the first place. In this verse, Valluvar clearly impies, the shameful act of palmyra-horse cannot be just a physical act of external manifestation, but has to be that of soul too. Only extreme love and desire for physical union can bring about such act not minding the shame it bears. Allusion to the same thought is abundant in many Sangam literary works, such as Kalitthogai and AganAnURu.

“A man in love would even climb palmyra-horse wiith this body and soul,
  not able to bear the pain of physical separation, shedding shame, in full”

இன்றெனது  குறள்:

நீங்கிநாண் துன்பம் பொறாவாண் மடலூர்வான்
ஆங்குட லோடுயிர் சேர்ந்து

nInginAN thunbam poRAvAN madalUrvAn

AngkuDa lODuyir sErndu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...