மே 01, 2015

குறளின் குரல் - 1107

111: (Rejoicing the Union - புணர்ச்சி மகிழ்தல்)

 [A chapter on consummate union between a man and his love at physical level. One of the noticeable aspects in these chapters is that they are written from a males’ perspective, perhaps due to the prevailing social set up of his times, which had specific order of things for two genders. However, the feelings are common for both and would definitely be demanded so in the gender equality insisting generation of the present times.]

1st May, 2015

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
                        (குறள் 1101: புணர்ச்சி மகிழ்தல் அதிகாரம்)

கண்டு - அவளைக் கண்ணால் கண்டும்
கேட்டு - அவள் பேசுவதைக் கேட்கவும்
உண்டு - அவளை உண்டு மகிழவும்
யிர்த்து - அவளருகில் அவளை நாசியால் முகர்ந்தும்
உற்று அறியும் - அவளை உடலால் தீண்டி மகிழவுமான
ஐம்புலனும் - ஐந்து புலன்களாலும் நுகர்வும்
ஒண்தொடி கண்ணே உள - அவ்வழகிய வளையணிந்த பெண்ணிடத்திலேயே உள்ளன.

அழகிய வளைகளணிந்த பெண்ணிடத்திலேயே அவளின் காதல் தலைமகனுக்கு கண்ணால் கண்டும், காதாலே அவளுடைய இன்மொழிகளைக் கேட்டும், அவளை உண்டு மகிழவும் (முத்தமிடுதலைக் குறிப்பதாகும்), அவளை நாசியால் முகர்ந்து (பாண்டியனுக்கு ஏற்பட்ட ஐயமும், அதை இறையனார் தீர்த்ததும் நினைவுக்கு வரவேண்டும்), அவளை உடலால் தீண்டிப் புணர்ந்தும் அடையக்கூடிய ஐம்புலன்களுக்குமான இன்ப நுகர்வும் உள்ளன என்கிறார் வள்ளுவர்.

இக்குறளுக்கான இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் மிகவும் இருப்பதிலினின்று, சங்கம் தொட்டு இன்று வரை புலவர்களுக்கு பாடும் பொருளாக இது இருந்து வந்திருப்பதும், அதுவும் தயங்காமல் பேசப்பட்டு வந்துள்ள இயல்பான வாழ்வியல் கூறாக இருந்திருப்பதும் புலப்படுகிறது.

மணிமேகலையில் வரும் கீழ்காணும் வரிகளைப் பார்ப்போமா?

இன்ன ளார்கொ லீங்கிவ ளென்று
மன்னவ னறியான் மயக்க மெய்தாக்
கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்
உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்
உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்
பயிலிதழ்க் கமலமும் பருவத் தலர்ந்த
மலர்வா யம்பின் வாசங் கமழப்
பலர்புறங் கண்டோன் பணிந்துதொழில் கேட்ப
ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்
பொருவரு பூங்கொடி போயின வந்நாள்                     

மேலும் பல இலக்கிய எடுத்துக்காட்டுகள், பெருங்கதை, சீவகசிந்தாமணி, திருவாய் மொழி, கம்ப இராமாயணம் போன்றவற்றிலும் இக்குறளின் கருத்தையொட்டியே அமைந்திருப்பதைக் காணலாம்.

Transliteration:

kaNDukETTu uNDuyirttu uRRaRiyum aimpulanum
OntoDi kaNNE uLa.

kaNDu – Seeing her
kETTu – listening to her sweet words
uND(u) – devouring her (alluding to kissing her)
uyirttu -  smelling her aroma
uRR(u) aRiyum – and also feeling her through physical union
aimpulanum – all these pleasures of five physical senses
OntoDi kaNNE uLa. – are only in my beloved, wearing birght bracelts

My beloved with bright bracelets has all the pleasures of five senses – that of seeing in beautiful form, spoken sweet words, devouring through kissing her sweet lips, smelling her sweet fragrance (perhaps one might be reminded of the doubt of Pandyan King and the associated Nakkeerar episode) and the pleasure of physically being united with her, says vaLLuvar from the perspective of a male.

However, they are indeed true for a lady in love too, though vaLLuvar speaks of it from a male-perspective.

Being a topic of life sustenance, and an integral aspect of life, this has been sung by most poets from Sangam age till today, without any hesitation or embarrassment. Abundance examples are there in Perungkadai, ManimEkalai, CheevagachintAmani, Kamba Ramayanam etc,. that similarly express!


“Only with my lady of bright bracelet, are the pleasures of seeing,  
 listening, eating, smelling, and the physical union through mating”

இன்றெனது குறள்:

ஒளிவளைத் தையலாள் கண்ணே உளதாம்
துளிர்த்திடும் ஐம்புலநு கர்வு

oLivaLait taiyalAL kaNNE uLadAm
tuLirttiDum aimbulanu garvu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...