பிப்ரவரி 22, 2015

குறளின் குரல் - 1039


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
                    (குறள் 1033: உழவு அதிகாரம்)

உழுதுண்டு - தம்மோடு, யாவரும் உண்டு மகிழும் படியாக உழவுத்தொழிலில் ஈடுபட்டு
வாழ்வாரே வாழ்வார் - வாழ்கின்றவரே உண்மையாக தமக்கும் பிறருக்கும் உரியவராக வாழ்கிறவர்
மற்றெல்லாம் - மற்றவரெல்லாம்
தொழுதுண்டு - அவர்களைத் தொழுது, வணங்கி, தம் உணவுக்காக அவர்களின்
பின் செல்பவர் - பின்னாலே செல்கின்றவர்.

உழவுத்தொழிலையும், அதைச் செய்வோரையும் உயர்வாகச் சொல்ல, மிகவும் அதிகமாக மேற்கோளாக எடுத்தாளப்படும் குறள். உழவுத்தொழிலில் ஈடுபட்டு தம்மோடு, பிறருக்காகவும் விளைவிக்கும் உழவர் பெருமக்களே உண்மையில் தமக்காகவும், பிறருக்காகவும் வாழ்கின்றவர்கள். மற்றவர்களெல்லாம், அவ்வுழவர் பெருமக்களைத் தொழுது, வணங்கி, தம் உணவுக்காக அவர்களின் பின்பே செல்லவேண்டியவர்கள்.

Transliteration:

uzhudunDu vAzhvArE vAzhvArmaR RellAm
thozhudunDu pinsel bavar

uzhudunDu – Doing agriculture to produce food for self and others to ear
vAzhvArE vAzhvAr – that live as such are the one truly live for self and others
maRRellAm – Others (who do not do agriculture)
thozhudunDu – remain subservient to farmers to feed themselves
pin selbavar – and go behind them for their own survival and sustenance

Here is a popular and often quoted verse to speak about the glory of agricultural professionals and the farmers. The farmers that produce for themselves and others to eat are the one who truly live as they live for themselves and others too. Others just remain subservient to such farmers, looking up to and go behind them for their own survival and sustenance.

“Farmers that provide food for self and others are the ones that truly live
 Others are just subservient and go behind them to sustain and survive”


இன்றெனது குறள்:

வாழ்பவராம் உண்டி தருவுழவோர் பின்சென்று
தாழ்ந்தண்டி வாழ்வோர் பிறர்

vAzhbavarAm uNDi tharuvuzhavOr pinsenRu
thAzhndanDi vAzhvOr piRar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...