ஜனவரி 01, 2015

குறளின் குரல் - 988

2nd Jan 2015

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
                                    (குறள் 982: சான்றாண்மை அதிகாரம்)

குணநலம் - உள்ளத்தில் அடக்கமும், ஒழுக்கமும் நிறைந்திருத்தல்
சான்றோர் நலனே - சான்றோர்க்கு உரிய நலமாகக் கொள்ளப்படுவது
பிறநலம் - மற்றைய புற நலங்கள் எல்லாம்
எந்நலத்து - எவ்வித நலத்திலும்
உள்ளதூஉம் - உள்ள ஒன்றாகக் வைக்கப்படுவது
அன்று - இல்லை

உள்ளத்தளவில் ஒழுக்கமும், அடக்கமுமாகிய பண்புகள் நிறைந்து இருப்பதே சான்றோர்க்கு உரிய பண்பு நலமாகக் கருதப்படுவதாம். மற்ற புற நலங்கள் (செல்வத்தோடு இருப்பது, கல்வியறிவில் சிறப்பது, உடலழகு போன்றவை), எவ்வித நல்ல நலங்களிலும் ஒன்றாக வைக்கப்படுவதில்லை. எந்நலத்து என்றது ஏனைய பிற நல்லவையாகக் கருதப்படும் நலங்களாம்.

Transliteration:

guNanalam sAnROr nalanE piRanalam
ennalaththu uLLAdUum anRu

guNanalam – Being modest and of virtuous conduct
sAnROr nalanE – are the good virtues appropriate for sublime people
piRanalam – other factors of well being
ennalaththu – other honorable other virtues
uLLAdUum anRu – as part of them not considered.

Modesty and virtuous conduct are the essential attributes required of sublime persons. Other external manifestations of attributes (wealth, education, bodily beauty) are not kept one among the virtues required of sublimity.

“Modesty and virtuous conduct are the essence and essential of sumblimity
 With other manifestations of attributes, do not belong to such elite fraternity


இன்றெனது குறள்:

சான்றோர்க் கணிகலம் நற்குணமாம் மற்றெல்லாம்
தோன்றும் புறத்தழகே யாம்

sAnROrk kaNikalam naRkuNAmAm maRRellAm
thOnRum puRaththazhagE yAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...