19th
Jan 2015
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
(குறள் 999:
பண்புடைமை அதிகாரம்)
நகல் வல்லர் - பிறரோடு இயைந்தொழுகும்
பண்பிலே வல்லராயிருதல்
அல்லார்க்கு - அவ்வாறில்லாதவர்க்கு
மாயிரு ஞாலம் - இப்பரந்த உலகம்
பகலும் பாற்- நண்பகலிலும்
பட்டன்று இருள் - இருளில் மூழ்கியதுபோலாம்
பிறரோடு இயைந்து ஒழுகும் பண்பிலே வல்லவராயில்லாதரவர்க்கு,
இப்பரந்த உலகே நண்பகலிலும் இருளில் மூழ்கியதுபோலாம். இவர்கள் கனியிருப்ப காய் கவர்ந்த
மடைமையில் உள்ளவர்கள். ஊரோடு ஒட்டி வாழுதலே ஒரு உயர் பண்பாம். அப்பண்பே இல்லாதவர்கள்
உலகில் வெளிச்சத்தைப் பார்க்காத கண்ணிருந்தும் குருடராய் வாழ்கிறவர்கள். அவர்களும்
ஒளியும் இருட்டாகவே இருக்கும்.
Transliteration:
nagalvallar
allArkku mAyiru njAlam
pagalumpAR
paTTanRu iruL
nagal
vallar – virtue of congenial and courteous agreement with
others
allArkku –
those who do not have that virtue
mAyiru
njAlam – in this big world
pagalum
pAR – even in broad day light
paTTanRu
iruL – the world is in utter darkness.
Someone that cannot be in congenial and courteous
agreement with others ever in this big world, even the broad day light is utter
darkness. They choose ripe fruit over raw fruit. To be in concordance with
people of the town itself is a desirable virtue, assuming the town as a whole
would be right on most issues. When such a virtue is lacking in people, they
are like blind, though blessed with perfect vision. For them even the
brightness is bleak and dark.
“A
person of no congenial or courteous gait
Even
daylight is dark in this world, not bright”
இன்றெனது
குறள்:
மற்றோர்
மகிழவாழும் பண்பிலார்க் கிவ்வுலகில்
நற்பகலும்
காரிருளே யாம்
maRROr
magazhavZhum paNbilArk kivvulagil
naRpagalum
kAriruLE yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam