ஜனவரி 17, 2015

குறளின் குரல் - 1003

17th Jan 2015

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
                                    (குறள் 997: பண்புடைமை அதிகாரம்)

அரம் போலும் - அறுக்கும் அரத்தினைப்போல்
கூர்மையரேனும் - கூர்மையான அறிவு உடையவராக இருப்பினும்
மரம் போல்வர் - மரக்கட்டை போன்று ஓர் உயிர்ப்பும் இல்லாதவர்
மக்கட்பண்பு - நன்மக்களுக்கு வேண்டிய பண்பு நலன்கள்
இல்லாதவர் - அற்றவர்.

எவ்வளவுதான் கூர்மையான அறிவு படைத்தவராக இருப்பினும், நன்மக்களுக்கு வேண்டிய பண்பு நலன்கள் இல்லாதவர் நட்ட மரம்போல் ஓரறிவு உள்ளவராகவே கொள்ளவேண்டும். சற்று கூடுதலாகவே சொல்லவேண்டுமென்றால் பட்ட மரம்போன்றவராவர். பண்பில்லாதவரை அஃறிணைப் பொருளாகவே கூறும் குறள்.

Transliteration:

arampOlum kUrmaiya rEnum marampOlvar
makkaTpaNbu illA davar
aram pOlum – like a blade that cuts
kUrmaiyarEnum – though having sharp intellect
maram pOlvar – they are wooden log or just dead wood
makkaTpaNbu – required good virtue of courtesy
illAdavar – when they are devoid of that.

Regardless of how sharp a persons’ intellect is if they are devoid of good virtues of courtesy, such persons are like wooden log or even dead wood, This verse places such persons as lifeless object instead of a live one.

Though of razor sharp intellect, a person without
Virtue of courtesy, is like woodlog to say the least”

இன்றெனது குறள்:


கூர்த்த அறிவுடைத்தும் பட்ட மரம்போல்வர்
சீர்த்தநற் பண்பிலா தார்.

kUrththa aRivuDaiththum paTTa marampOlvar
sIrththanaR paNbilA dAr.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...