ஆகஸ்ட் 29, 2014

குறளின் குரல் - 862

29th Aug 2014

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
                        (குறள் 856: இகல் அதிகாரம்)


இகலின் மிகல் - பிறரோடு பகையை வளர்ப்பதே
இனிது என்பவன் - எனக்கு இனிமை பயப்பது என்றிருப்பவனுடைய
வாழ்க்கை - வாழ்வானது
தவலும் - வறுமையால் வருந்திக் குறைவுறும்
கெடலும் - அதன்பின் அழிவுறுதலும்
நணித்து - நடைபெறும் விரைவில்

சிலருக்கு எல்லோரோடும் பகையுறவிலேயே இருப்பது பிடித்திருக்கிறது. அதனால் அதை மேலும் வளர்ப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். அதுவே வாழ்க்கையில் வெல்லும் வழி என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. அத்தகையோரது வாழ்வு குறைவுற்று, வறுமையால் வருந்தி, பின்பு அழிவுறுதலும் விரைவில் நடைபெறும்.

பகைமை வளர்ப்பது காழ்ப்புணர்ச்சி, வெறுப்புணர்ச்சி இவற்றையே. இவையிரண்டும் நட்பென்னும் சொல்லுக்கே பகையாகி, எவரையும் நட்புறவில் நிலைக்கவிடாதவை. நட்பில்லா மனிதர் வாழ்வில் பெறுவதற்கு ஒன்றுமிராது. அவர்கள் வெற்றிகளென நினைப்பவையும் தற்காலிகமானவையே. அவையும் இழப்புகளாக முடிந்து, அவர்களது, வாழ்க்கை அழிவுக்கு விரைந்து செல்லும் என்பதையே இக்குறள் உணர்த்துகிறது.

Transliteration:

Igalin migalinidu enbavan vAzhkkai
Thavalum keDalum naNiththu

Igalin migal – To foster enemity with others
inidu enbavan – that who says it is sweet and relishable to be successful.
vAzhkkai – their life
Thavalum – will suffer and diminish in stature of life
keDalum – and ruin of their life
naNiththu – is also near.

Some people gloat in making enemies and instead of trying to defuse enemity, they take pleasure in nurturing it further and truly believe that to be the recipe for their success. Such people will diminish in their stature and ruin in their life will be nearer and sooner, says this verse. After all enemity begets bitterness and deciimates any possibilty of friendship from any corner. Being devoid of friendships makes one lose everything, even the temporary gains and will render him with nothing and that too sooner than later is what is implied by this verse.

“Gloating in fostering enemity for temporary gains, a person falls
in stature, loses everthing; his destruction nearer, never stalls”

இன்றெனது குறள்:

பகைவளர்ப்பே பாங்கென்பான் வாழ்வுறும் பாழ்வும்
நகைபட் டழிவும் விரைந்து

pagaivaLarippE pAngenbAn vAzhvurum pAzhvum
nagaipaT Tazhivum viraindu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...