ஏப்ரல் 01, 2014

குறளின் குரல் - 712

1st Apr 2014

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
                        (குறள் 706: குறிப்பறிதல்அதிகாரம்)

அடுத்தது காட்டும் - தன் அண்மையில் உள்ளதை உள்ளபோல் காட்டுகின்ற
பளிங்குபோல் - கண்ணாடியைப் போல
நெஞ்சம் கடுத்தது - ஒருவரது உள்ளத்தின் ஊடேயோடும் எண்ணங்களை
காட்டும் முகம் - அவரது முகமே காட்டிவிடும்.

மீண்டுமொரு மேற்கோளாக முழங்கும், பரவலாக அறியப்பட்ட குறள். தன் அருகில் இருக்கும் பொருட்களை உள்ளதுபோல காட்டுகின்ற கண்ணாடியைப் போல, ஒருவரது உள்ளத்துள்ளதை, அவரது முகமே காட்டிவிடும். “அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது எல்லோரும் அறிந்த பழமொழிதானே? “ஒளிப்பினும் உள்ளம் பரந்ததே கூறும் முகம்” என்றும்,  “ஒருத்தன் முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை” என்று நான்மணிக்கடிகைப் பாடலும், “அகத்தையெல்லாம் முகத்தினி உணர்ந்து” என்று பெருங்கதைப் பாடல் வரியும் கூறுகின்றன. மற்ற சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு பாடல்களிலும் ஒத்த கருத்தே வருவதையும் காணலாம்.

Transliteration:

aDuththadhu kATTum paLingupOl nenjam
kaDuththadhu kATTum mugam

aDuththadhu kATTum – that which reflects what is next to it
paLingupOl – like a mirror
nenjam kaDuththadhu – what is running in somebody’s mind
kATTum mugam – is revelaed by his face.

Another popular verse that has been long used as quotable! Just like a mirror that reflects the objects next to it, as the original, a face reveals what is running in somebody’s mind clearly. Isn’t it an old adage that says, “What is in the mind is shown in the face”?, and has been used in many a literary work, the stories to cite how somebody’s happiness, sorrow, anger, deception, good and bad are revealed by his face.

“A mirror shows as is, an object next to it
 Likewise a face does what’s in one heart”


இன்றெனது குறள்:

ஆடிதன் அண்மையுள காட்டுதல்போல் உள்ளத்தில்
ஊடியதைக் காட்டும் முகம்  (ஆடி - கண்ணாடி)

Adithan AnmaiyuLa kATTudhalpOl uLLAththil
Udiyadhaik kATTum mugam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...