ஜனவரி 28, 2014

குறளின் குரல் - 649

28th Jan 2014

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
                        (குறள் 643: சொல்வன்மை அதிகாரம்)

கேட்டார்ப் - ஏற்கனவே விரும்பிக் கேட்பவர்களை (நட்பு, மற்றும் பயனுள்ளமையினால்)
பிணிக்கும் - கட்டிப் போடும்
தகையவாய்க் - தன்மை கொண்டதாகவும்
கேளாரும் - கேளாதோரையும் (விருப்பமில்லார், பகையுறவார்)
வேட்ப - விரும்பி கேட்கச் செய்வதாய், வேட்டல் கொள்ளச் செய்வதாய்
மொழிவதாம் - ஒருவர் (குறிப்பாக அமைச்சர்கள்) பேசுதலே
சொல் - பேச்சாகும்

ஒருவர் பேசுவது ஏற்கனவே விரும்பிக் கேட்க வந்திருப்பவர்களைக் கட்டிபோடும் படியானதாகவும், கேட்க விருப்பமே இல்லாமல் இருப்போரையும் வேட்டலோடு கேட்க வைக்கும்படியாக இருக்கவேண்டும்.  நட்பும், முன்பே நயந்து கேட்டோரும், பேசுபவரின் சொற்சுவையை ஏற்கனவே அறிந்தவர்கள். அவர்களை மீண்டும் மீண்டும் தன் பேச்சாலே பிணைத்திருக்கும்படியான பேச்சாக இருக்கவேண்டும். கேட்டிலாதோரும், மற்றும் பகை நிலையில் இருப்பவர்களும் அவர்களின் நிலை மறந்து, மறைந்து கேட்கும் படியாக பேசுதலே பயனுள்ள பேச்சாகும். அவ்வாறிருக்கப் பேசுவதே சொல் வல்லோரான அமைச்சருக்கு அழகு என்பதைச் சொல்லுவதே இக்குறள்.

பரிமேலழகர் உரை விருப்பமுற பேசுதலுக்கு உண்டான இலக்கணமாக ஐந்து குணங்களைக் கூறுகிறது. அவையாவன, வழுவின்மை (குற்றமறப் பேசுதல்), சுருங்கச் சொல்லுதல், விளங்கச் சொல்லுதல், இனிமையாகப் பேசுதல், பேசுதலுக்கான விழுப்பயனை (எப்பயன் நோக்கிச் சொல்லப்பட்டதோ, அப்பயனை முழுமையாகத் தருதல்).

பிணைக்கும் என்ற சொல் ஐயமற கட்டிப்போடுதலைக் குறிக்கும். பிணிக்கும் என்ற சொல் நோயுறும் என்றும் பொருளாகுமாகையால், வள்ளுவர் ஏன் பிணிக்கும் என்ற சொல்லை பயன்படுத்தினார் என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை பிணைக்கும் என்ற சொல் மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்ட ஓலைச் சுவடிப் படிமங்களினால் மாறியிருக்கலாம்.

Transliteration:

kETTarp piNikkum thagaiyavAik kELArum
vEtpa mozhivadAm sol

kETTarp – already willingly listening (because of friendship, usefulness)
piNikkum – binding type
thagaiyavAik – with such quality and purpose
kELArum – Even for those who don’t listen (don’t want to or in enemy state)
vEtpa – to be desireous of listening to
mozhivadAm – speak in such a manner
sol – is the true articulation (expected of a minister)

A persons words should be binding the people that listen to him either because that he is a friend or because of the purpose and usefulness of the words spoken. They should also induce immense interest in the people that are not interested to listen either they are not used to listening to others or because of the state of enmity so that they are changed positively to alter the present state. Such should be the words of a minister.

Parimelazhagar’s commentary defines the attributes of such articulation. They are: flawlessness, brevity, comprehensible, sweet, useful, serving the purpose of words as spoken.

The word, “piNaikkum” means binding and instead the word used in this verse is “piNikkum” which could be interpreted as “bringing disease”, though “piNiththal” also means binding. Perhaps vaLLuvar did not intend the word and it could simply be a transfer mistake moving from palm leaf to palm leave over the centuries, changing through many hands.

“Binding the cohorts, inducing the interest in disinterested
 should be the words spoken by the ministers committed”


இன்றெனது குறள்:

கேட்போரைக் கட்டுவதும் கேளார்க்குத் தேட்டமும்
கூட்டுவிதம் பேசுதலே பேச்சு

(தேட்டம் - விருப்பம்)

kEtpOraik kaTTuvadum kELArkkuth thETTamum
kUTTuvidam pEsudalE pEcchu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...