செப்டம்பர் 28, 2013

குறளின் குரல் - 528


53: (Embracing kinship- சுற்றந்தழால்)

[In the middle of chapters discussing politics, and the aspects of a rule, ruler etc., this chapter that seems to mean embracing and be supportive to relatives or kith and kind. Here vaLLuvar does not necessarily mean the close blood relatives of a ruler. People that are closely associated with a ruler become his close relatives and associates.  Such associates should be embraced by the ruler and be kept close as they will come in support during difficult times. ]

28th Sep 2013

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
                             (குறள் 521: சுற்றந்தழால் அதிகாரம்)

Transliteration:
paRRaRa kaNNum pazhamiayaip pARTTudhal
suRRaththAr kNNE uLa

paRRaRa kaNNum – even during the times of no prosperity but utter poverty
pazhamiayaip – relationship of old times
pARTTudhal – thinking of such old time relationships
suRRaththAr kNNE – only with people that have close associates
uLa - is possible

Only closely associated people (the word suRRam does not necessarily mean kinfolks alone) will stick to a rulers even when they have lost all their wealth, status, power and the title as the ruler. They cherish the past glorious days that they stayed with the ruler to enjoy all the benefits. They are the ones to be called as relatives.

Auvayyar, in her work of  “mUdurai” thus says, those that leave like birds from the dried up pond, are not to be considered kindred.  The lily, and kuvaLai and koTTi plants that stay low and high and still  stay in the pond, during the times when it has dried up or full, are the good examples of what kind of relatives one must have. In another verse, Auvayyar also caustions that sometimes, relatives would be like disease that brews inside to kill and such relatives one should be cautious of.

“Kindred are the ones that cherish the glorious past
 to stay as support to their ruler - friendships that last.”

தமிழிலே:
பற்றற்ற கண்ணும் - ஒரு பற்றுமில்லா வறுமையில் வாடுங்காலத்தும்
பழைமை - முன்பிருந்த வாழ்வையும் உறவையும்
பாராட்டுதல்  - எண்ணி நினைவுகூர்தல்
சுற்றத்தார் கண்ணே - சுற்றத்தார் ஆகிய நெருக்கமானவர்களின் பொறுப்பிலேயே
உள - இருக்கிறது.

இவ்வதிகாரத்தின் முதற்குறளில், ஓர் ஆள்பவருக்கு அணுக்கமானவர்கள், ஆள்பவர் செல்வம், பதவி, பட்டம், செல்வாக்கு இவற்றைத் தொலைத்துவிட்ட காலத்திலும், அவரோடு இருந்த பழநாட்களை நினைந்து போற்றுபவர்கள் என்கிறார் வள்ளுவர். அவர்களே சுற்றம் என்று கூறப்படுபவர்கள். ஔவையாரின் மூதுரையில், சுற்றத்தைப் பற்றி கூறும்போது, அற்ற குளத்தில் அறு நீர்ப்பறவை போன்றவர்கள் அல்லர் உண்மையான சுற்றம் என்பார்.  அந்த  முழுப்பாடலும், அதனுடைய விளக்கமும்.

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வா ருறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு.

நீர் வற்றியதும், குளத்திலிருந்து நீங்கிவிடும் நீரில் வாழும் பறவைகளைப் போல துன்பம் வந்த போது நீங்கி விடுபவர்கள் சுற்றத்தார் ஆக மாட்டார்கள். அந்தக் குளத்திலுள்ள கொட்டிப்பூண்டையும், அல்லிக்கொடியையும், குவளைக் கொடியையும் போன்றவர்களாக சேர்ந்து, (நீர் ஏற உயர்ந்தும், நீர் குறையத் தாழ்ந்தும் இருத்தல் போல) இன்பத்தையும் துன்பத்தையும் ஏற்றுக் கொள்பவர்களே நல்ல சுற்றத்தவர் ஆவார்கள்.

நல்ல சுற்றம் எத்தகையது என்று சொல்லும் ஔவை, மற்றொன்றையும் சுற்றம் பற்றி கூறுவது கவனிக்கத் தக்கது.

“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி “

சுற்றமும் பல நேரங்களில் உடனிருந்து கொல்லும் வியாதிபோன்றதாகையால், அவரிடத்தும் கவனமும் எச்சரிக்கையும் தேவையென்று உணர்த்துகிற பாடலும் மூதுரைப் பாடல்தான்.

இன்றெனது குறள்:

சுற்றமென்ப யாதெனின் அற்றநாளும் அற்றைநாள்
உற்றவுற வெண்ணிச் செயல்

suRRamneba yAdhenin aRRanALum aRRainAL
uRRavuRa veNNdich cheyal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...