ஆகஸ்ட் 28, 2013

குறளின் குரல் - 497


 28th Aug 2013

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
                          (குறள் 490: காலமறிதல் அதிகாரம்)

Transliteration:
Kokkokka kUmbum paruvaththu maRRadhan
Kuththokka seerththa idaththu

Kokkokka – one must patiently wait like a heron
kUmbum paruvaththu  - when they have to be restrained
maRRadhan – other than that,
Kuththokka – like how it strikes like its prey in lightening speed
seerththa idaththu – must finsh the undertaken deed when the time comes.

Auvayyar in her mUdhurai says, “A heron will wait letting all the fishes runaway until the right fish comes along as its prey”. In this last verse, vaLLuvar says, like a heron waits for the right fish to pass by to strike and pick up, one must wait till the right time and be swift in action to do the deed when the time has arrived.

The two important thoughts conveyed through this verse are: Patience till the time arrives; Whenthe time arrives getting into swift action.

“Patience for prey, when restraint is needed
 Strike in time for the action must be heeded”

தமிழிலே:
கொக்கொக்க (கொக்கு ஒக்க) - கொக்கைப் போல பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்
கூம்பும் பருவத்து - ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில்
மற்றதன் - மற்றபடி அது தன்னுடைய
குத்தொக்க (குத்து ஒக்க) – (இரையை) மின்னல் வேகத்தில் குத்தி எடுத்துக்கொள்ளுமோ
சீர்த்த இடத்து - அவ்வாறு தகுந்த காலம் வாய்க்கும் போது (செயலாற்றி விடவேண்டும்)

“மடைத் தலையில் 
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் 
வாடி இருக்குமாம் கொக்கு” என்பது ஔவையாரின் மூதுரை, எல்லோரும் அறிந்ததே. இவ்வதிகாரத்தின் இறுதிக் குறளிது. கொக்கு அல்லது நாரை போன்ற பெரும் பறவைகள் ஆற்றின் கரையிலோ, அல்லது நீரிலோ பொறுமையுடன் காத்திருக்கும். நீரில் இருக்கும் மீன்களெல்லாம் காத்திருக்கும் ஆபத்து தெரியாமல் நீந்திக்கொண்டிருக்கும். அதன் இரைக்குத் தேவையான மீன் தன்னருகில் நீந்தும் வரை காத்திருக்கும் அக்கொக்கு வந்தவுடன் ஒரே கொத்தாகக் குத்தி அதைக் கவ்வி உட்கொண்டுவிடும்.

இதில் இரண்டு கருத்துக்களைச் சொல்லுகிறார் வள்ளுவர்.  காலம் கனியும் வரைப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். கனிந்தவுடன் விரைந்து மின்னல் வேகத்தில் செயல்பட்டு செயலாற்ற வேண்டும். கொக்கின் குத்து ஒக்க என்று சொன்னதன் மூலம் உலகின் முதல் குத்துப்பாடலுக்குச் சொந்தக்காரராகிறார் வள்ளுவர். குத்து என்பது குத்தி எடுத்தலைக் குறிக்கும்.  பரிமேலழகர் இருப்பிற்கும் செயலுக்கும் இலக்கணம் கூறுவதாகக் இக்குறள் உள்ளது என்கிறார்.

பெருங்கதைப் பாடல் ஒன்றும் இக்கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது. தெளிவுரை இல்லாமலே விளங்கும் கருத்து.

ஒடுங்கி இருந்தே உன்னியது முடிக்கும்
               
கொடுங்கால் கொக்கின் கோள்இன மாகிச்
               
சாய்ப்பிட மாகப் போர்ப்படை பரப்பி
               
வலிகெழு வேந்தனை வணக்குதும்

இன்றெனது குறள்(கள்):

காத்தொடுங்கும் கொக்கைப்போல் காலத்தே காரியத்தைச்
சாத்தியமாய் மாற்றுதல் நன்று.

kAththoDungum kokkaippOl kAlaththE kAriyaththaich
chAthiyamAi mARRudhal nanRu


இரைக்காய் இருந்தொடுங்கும் கொக்கிரை காணின்
விரைந்துசெயல் போல்வினை ஆற்று

iraikkAi irundhoDungum kokkirai kaNin
viraindhuseyal pOlvinai ARRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...