ஜூலை 30, 2013

குறளின் குரல் - 468


47: (Deliberate before deed - தெரிந்து செயல்வகை)
[An important trait to have for everyone, more so for people of governance and busiess to engage in deeds that will result in fruitful outcomes. Knowing everything that is there to know before indulging in a deed is an imperative for a ruler. This is applicable in the context of a rule, justice, business, commerce, and even dealing with friendly and enemy states – almost all aspects of ruling.]
30th July 2013

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
                          (குறள் 461: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)

Transliteration:
azhivadhUum Avadhuum Agi vazhipayakkum
Udhiyamum sUzhndhu seyal

azhivadhUum – By doing a deed, what will be the loss
Avadhuum – and what will the total gain
Agi – one must guage that first
Vazhipayakkum – and also find what is given by
Udhiyamum – as the excess or profit out of the deed
sUzhndhu – must calculate and know
seyal – then get into the deed.

In this beginning verse of the chapter, vaLLuvar starts showing how a balance sheet should look like for anyone, especially for rulers. By doing a deed, one must be aware of what will be created and in that process, what will be lost and finally what will be earned out of that. Only if there is earning, one must engage in that pursuit. The fundamental aspect of income is emphasized for doing a deed. Or in otherwords, the verse suggests never to indulge in deeds that do not earn any benefit.

“Prudent it is to know that which is lost and gained,
 the profit attained in a deed before fully engaged”

தமிழிலே:
அழிவதூஉம்  - ஒரு செயலைச் செய்வதாலே எது அழியும் (நட்டம் என்ன)
ஆவதூஉம்  - அல்லது எது உருவாகும் (எவ்வளவு வருவாய் வரும்)
ஆகி - என்று அறிந்து
வழிபயக்கும் - அதன் வழி பிறக்கும்
ஊதியமும் - வருவாயிலிருந்து நட்டத்தைக் கழித்துவிட்டு எஞ்சி வரும் இலாபமான ஊதியத்தையும்
சூழ்ந்து - கணக்கிட்டு அறிந்து கொண்டு
செயல் - ஒரு செயலைச் செய்யவேண்டும்

இவ்வதிகாரத்தின் முதற்குறளில், கணக்கு வழக்கைச் சொல்லி துவக்குகிறார் வள்ளுவர். ஒரு செயலைச் செய்வதால், இன்னவை உருவாகும், இன்னைவை நட்டமாகும் என்று அறிந்து, ஆராய்ந்து, முடிவில் ஈட்டம் இவ்வளவு என்று அறிந்த பின்னரே ஒருவர் ஒரு செயலில் இறங்கிச் செய்யவேண்டும். இதுவே இக்குறள் சொல்லும் கருத்து. ஊதியம் என்றதால், இறுதியில் வருவாய் என்று ஒன்று இருக்க வேண்டியதை அடிக்கோடிடுகிறார் வள்ளுவர். ஆதாயம் இல்லாத செயல்களில் இறங்காதே என்பதை அழகாகச் சொல்லுகிற குறள்

இன்றெனது குறள்:

எச்செயலும் ஏதழியும் ஏதுறும் என்றாய்ந்து
அச்செயலால் ஆக்கமுற ஆக்கு

eccheyalum Edhazhiyum, Edhurum endRayndhu
achcheyalAl AkkamuRa Akku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...