ஏப்ரல் 22, 2013

குறளின் குரல் - 375


22nd April 2013

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.
                            (குறள் 367: அவாவறுத்தல் அதிகாரம்)

Transliteration:
avAvinai ARRa aRuppin thavAvinai
thAnvENdu mARRAn varum

avAvinai – if desire
ARRa – completely,
aRuppin - severed
thavAvinai – the salavation or the blessing of no birth
thAnvENdu(m)- when desired
ARRAn varum – completely will come.

Desire is guile; if it is severed completely, a person attains salvation and the state of birthlessness, that too in a way the person desires. If anyone had doubts about the implied meaning of birthlessness or salvation as the result of severing desire, in previous verses, it is clarified here.  The word “thavAvinai” means “salvation” which itself denotes the state of birthlessness.

The word “thavAvinai” has been used to mean, “the repercussions of one’s own deeds” in aRaneRichAram, by MunaippADiyAr- (pOgum thuNaikkaN thavAvinai vandhaDaiyak kaNDum).  This also indirectly conveys the meaning of the verse. After all “Salvation” may be construed to be the result of one’s own deed of severing desire.

“Destroying the desire completely
 Bestows Salvation desired wishfully”

தமிழிலே:
அவாவினை - ஆசையாகிய வஞ்சகனை
ஆற்ற - முற்றிலுமாக,
அறுப்பின் - பற்றறுத்துவிடின்
தவாவினை
 - மீண்டும் பிறவாத முத்தி நிலையை
தான்வேண்டும் - தான் விழையும்
ஆற்றான் வரும் - வழியிலே வாய்க்கும்

ஒருவர் வஞ்சமாகிய ஆசையை முற்றுமாகப் பற்றறுத்துவிடின், அது அவர்க்கு மீண்டும் பிறந்திறக்காத முத்தி நிலையினை அவர் விரும்புகிற வழியிலே கிடைக்குமாறு செய்துவிடும். முந்தைய குறள்களில் அவா அறுத்தலின் கிடைக்கும் பயன் யாது என்னும் கேள்வி எழுந்திருந்தால், அந்த கேள்விக்குப் பதிலாக “தவாவினை” அதாவது “முத்தி” என்ற சொல்லை இங்கு கையாண்டிருக்கிறார். முத்தி என்றாலே மீண்டும் பிறந்திறக்காத நிலைதான். இக்குறளினால், அவா அறுத்தலின் பயனாக பிறப்பறுத்தலையே இவ்வதிகாரம் முழுவதும் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.

அறநெறிச்சாரப் பாடலொன்றில் முனைப்பாடியார், “போகுந் துணைக்கண் தவாவினை வந்தடையக் கண்டும்” என்று சொல்லியிருப்பார். இதில் தவாவினை, தான்செய்த வினையென்ற பொருளில் சொல்லப்பட்டது.  இதுவும் கூட இக்குறளுக்குப் பொருந்தியே வருகிறது. விளைவு முத்தியானால், அதுவும் ஒருவர் செய்த நல்வினையாம் ஆசையின்மையினால்தான் வந்தது என்று கொள்ளலாம்.

இன்றெனது குறள்(கள்):

அவாவை அறவே அழிக்க அழியா
தவாழ்வு விரும்பிய போல்

avAvai aRavE azhikka azhiyA
thavAzhvu virumbiya pOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...