ஏப்ரல் 21, 2013

குறளின் குரல் - 374


21st April 2013

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.
                            (குறள் 366: அவாவறுத்தல் அதிகாரம்)

Transliteration:
anjuvadhOrum aRanE oruvanai
vanjippa dhOrum avA

anjuvadhOrum – to be fearful of the trap of desire (and live desire free)
aRanE – is virtuous
oruvanai – because (what) to a person
vanjippadhOrum – illusorily deceptive
avA – is the desire for earthly pleasures ( specifically for penitents)

Desire is guile and dilutes the intention of seeking the higher truth. But to be fearful of that guile is virtuous is what vaLLuvar alludes.  He shows the desire to be faulty and a mistake; urges penitents to be devoid of desire to be virtuous.

Even in this verse, Parimelazhagar interprets this as a suggestion of rebirth that desire pushes someone to on earth, and likens it to cunning act.

“To be fearful of the trap of desire is virtuous
 As the desire is guile, vile and treacherous”

தமிழிலே:
அஞ்சுவது ஓரும் - ஆசையென்பதற்கு அஞ்சி வாழுதல் (ஓரும் என்பது அசைச்சொல்)
அறனே - அறமாகும்
ஒருவனை
 - ஏனெனில் ஒருவரை
வஞ்சிப்பது ஓரும்  - வஞ்சித்து பிறந்திருக்கும் பாதையில் செலுத்துவது (ஓரும் என்பது அசைச்சொல்)
அவா - ஆசையென்னும் வஞ்சகனாம்.

ஆசையென்பது ஒருவரை வஞ்சித்து, மெய்யுணர்வை நோக்கிச் செல்லும் நோக்கை நீர்த்துப் போகச் செய்யும் வஞ்சகன். ஆதலால் அந்த வஞ்சகனுக்கு அஞ்சி வாழ்வதே அறமென்கிறார் வள்ளுவர்.
இதனால் அவாவைக் குற்றமுள்ளதாகக் காட்டி, அந்த குற்றத்திலிருந்து நீங்கலே அறமென்றும் காட்டுகிறார் வள்ளுவர்.

இந்த குறளிலும், ஒருவரை பிறப்பின் கண்ணே வீழ்த்துவது அவா என்று பரிமேலழகர் உரைசெய்துள்ளார். அதையே அவா செய்யும் வஞ்சகமாகக் காட்டுகிறார். அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று அறிவுடமை அதிகாரத்திலும் சொல்லப்போகிறார்.  மூவாசைகளை விட்டொழித்து முத்தி நெறி முயல்வோருக்கே, “யாமார்க்கும் குடியல்லோம்” என்னும் அப்பரின் உறுதி இருக்கும்.

இன்றெனது குறள்:
ஆசையாம் வஞ்சகனுக் கஞ்சிவாழ்தல் வாழ்விலறம்,
ஆசையற வாழும் திறம்.

AsaiyAm vanjaganukk kanjivAzhdal vAzhvilaRam
AsaiyaRa vAzhum thiRam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...