ஏப்ரல் 17, 2013

குறளின் குரல் - 370


17th April 2013

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.     
                            (குறள் 362: அவாவறுத்தல் அதிகாரம்)

Transliteration:
vEnDungAl vENDum piRavAmai maRRadhu
vENDAmai vENDa varum

vEnDungAl – If a person has to desire something
vENDum – the person must desire
piRavAmai – misery yielding the state of not being born again
maRRadhu – but that will
vENDAmai  - the desireless mind
vENDa varum – will come, when desire  (read with the previous mind)

This verse says desire is needed! What? Is desire needed? Does this chapter not preach the opposite? Yes, one must desire only one thing, which is the misery of not being born again.  But, even that desire, will be there only when the desirelessness is desired and strived for. vaLLuvar’s approach to this verse is rather dramatic to make it appealing and interesting.

Almost all of the devotional literature, urge everyone to seek the state of not being born again portraying the life on this earth as miserable. Sundarar thEvAram says, “kETppadhellAm piRavAmai kETTozhindhEn” and “enkOnE unaivENDik koLvEn piRavAmaiyE”, seeking rebirthlessness.

Among the Saiva SiddhAnthA literature, (collectively known as thirumuRai), thirukkaDavUr uyyakkoNDAr has written “thirukkaLiRRup paDiyAr”, which are based on ThirukkuraL verses.

Web is an endless source of knowledge, that show what we are looking for without much effort and also kindle our seeking. The aforementioned work can be found in http://www.thevaaram.org

“Desire the state of not being born and that
 is attained, if the desirelessness is sought”

தமிழிலே:
வேண்டுங்கால் - ஒருவருக்கு வேண்டுமென்றால்
வேண்டும் - வேண்டுவது இதுதான் (என்ன?)
பிறவாமை - துன்பத்தைத்தரும் “மீண்டும் பிறவாமை”தான்.
மற்றது
 - அதுவும் கூட
வேண்டாமை - அவா அறுத்தலாகிய விருப்பற்றத் தன்மையினை
வேண்ட வரும் - விழைந்தால் மட்டுமே வரும்

விருப்பு வேண்டும் என்று சொல்கிறது இந்த குறள். என்ன விருப்பையா? இது விருப்பை அறுக்கச் சொல்லும் அதிகாரமன்றோ? என்று கேட்கலாம். ஆமாம் விரும்பவேண்டுவதெல்லாம் ஒன்றைதான். அது, மீண்டும் பிறந்துழலும் பெரும் அவத்தையை பெறாமைதான். ஆனால் அவ்விழைவுகூட மற்றொன்றை விழையத்தான் வரும். விருப்பற்ற மனத்தைப் விரும்பிப் பெற்றால் மட்டும்தான் நிலையாமையாகிய பிறவாமை ஒருவருக்குக் கிடைக்கும். சொல்வதைச் சுவையாக ஒரு நாடகப்பாணியிலே சொன்ன குறளிது.

சுந்தரர் தேவாரத்தில்,”கேட்பதெல்லாம் பிறவாமை கேட்டொழிந்தேன்” என்றும், “எங்கோனே உனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே” என்பார், பிறவாமையை விழைந்து.

சைவ சிந்தாந்த நூல்களில் உள்ள மெய்க்கண்ட சாத்திரங்களில், உய்யக்கொண்டார் எழுதிய  திருக்களிற்றுப்படியார் திருக்குறளை அடிப்படையாக வைத்தே நிறையப் பாடல்கள் எழுதியுள்ளது.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை என்றமையால்
வேண்டின்அஃ தொன்றுமே வேண்டுவது – வேண்டினது
வேண்டாமை வேண்டவரும் என்றமையால் வேண்டிடுக
வேண்டாமை வேண்டுமவன் பால்.

இப்பாடலின் பொருள்: வேண்டுமிடத்துப் பிறவாமையையே வேண்டவேணுமென்று திருவள்ளுவர் சொன்னபடியினாலே, வேண்டுமானால் அந்தப் பிறவாமையொன்றுமே வேண்டுவது; விரும்பாமையை விரும்ப விரும்பினது வருமென்றும் அவர் சொன்னபடியினாலே, நம்மை விரும்பின கர்த்தாவினிடத்திலே விரும்பாமையை விரும்பிக் கேட்பாயாக. இதனுள், அவாவறுத்தலே பிறவாமைக்குக் காரணமென்பது கண்டு கொள்க

மின்வலையில் நூல்களின் தொகுப்பு தேடாமலே தேடுவதை நமக்குக் காட்டுகின்றன. தேடலை நம்முள் தோற்றுவிக்கின்றன. இப்பாடலும், அதற்குரிய பொருளும். திருமுறைகளைத் தொகுத்தளிக்கும் மின்வலைப்பக்கங்களில் காணலாம். (http://www.thevaaram.org).

இன்றெனது குறள்:
பிறவாமை வேண்டின் விழையாமை வேண்டும்
துறவை விழைவென்று நாடு

piRavAmai vENDin vizhaiyAmai vENDum
thuRavai vizaivenRu nADu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...