37: (Severing desire - அவா அறுத்தல்)
[Spritual
ignorance lands a person in desires, the first of three enemies. Desire brings
destruction. As seen in the last verse of previous chapter, desire, brings
anger out of dejection when not fulfilled; Anger completely blocks the vision
and thinking and sets a person to be ignorant. Hence vaLLuvar devotes an entire
chapter on quelling the root cause of desires or severing desires from the
self.]
16th April 2013
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்
எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
(குறள் 361: அவாவறுத்தல் அதிகாரம்)
Transliteration:
avAenba ellA uyirkkum ennjAnRum
thavAap piRappInum viththu
avA enba – desire is
ellA uyirkkum – for all lives
ennjAnRum- always
thavAap – without fail
piRapp(u) Inum – that which gives another birth in this world
viththu – a seed
Desire has many shades and can easily transform to
lust to become the seed that yields rebirth for everyone and always. vaLLuvar
begins this chapter with the definition of the nature of desire and hints that
it should be severed, curtailed.
The word, “Inum” is typically used in the context of
“giving birth” or just “giving” (remember
vaLLuvar’s earlier verse, “siRappInum selvamInum aRaththinUngu
Akkamillaip piRarkku”). The words “Inum” and “viththum” (giving and seed)
are not bad words. Using such mild words probably reduces the intensity of the
thought vaLLuvar attempted to convey. Also, this verse is acceptable only for
people that do not wish “rebirth” or even consider that a mistake.
Desire is the seed of rebirth that must be severed
For everyone, always and without fail, said learned.
தமிழிலே:
அவா என்ப - விழைவு, விருப்பு என்பது
எல்லா உயிர்க்கும் - உலகில் எல்லா உயிர்களுக்கும்
எஞ்ஞான்றும் - எப்போதும்
தவாஅப்
- தவறாமல்
பிறப்பு ஈனும் - மீண்டும் பிறப்பை பிறப்பிக்கும்
(ஈனும் என்பது பசு குட்டிப் போடுவதுபோல)
வித்து - விதை.
அவா, விழைவு, விருப்பு என்பது யாவருக்கும், எப்போதுமே “பிறப்பு” என்பதை மீண்டும் விளைக்கும் விதை போன்றதாம்.
இது இக்குறள் சொல்லும் கருத்து. அவா என்பதென்ன என்பதைச் சொல்லி, அதானாலேயே மீண்டும்
மீண்டும் பிறப்பும் என்று சொல்லி, “அவா” வைத் துண்டிக்கவேண்டியதைக் கூறுகிறார்.
ஈனும் என்ற சொல், “பிறப்பிப்பது” அல்லது “தருவது” என்ற
பொருள்களில் பொதுவாக வழங்கி வரும். பொதுவழக்கிலே, “பசு குட்டிகள் ஈனும்” என்பார்கள்.
வள்ளுவரும் , “சிறப்பீனும் செல்வமீனும் அறத்தினூங்கு ஆக்கமில்லைப் பிறர்க்கு” என்று
சொல்லியிருப்பார். ஈனும் என்ற சொல்லும் வித்து என்ற சொல்லும் தவறானவை அல்ல என்பதால்,
ஒருவேளை குறள் சொல்ல வந்த கருத்தின் வீரியம்கூட குறைந்ததாகக் கருதலாம். மறு பிறப்பு
என்பது விலக்கப்படவேண்டிய விழைவாகக் அல்லது பிழையாகக் கருதுபவர்களுக்கு மட்டுமே எற்புடைய
குறள்.
இன்றெனது குறள்:
விழைவென்னும் வித்து விளைக்குமே யார்க்கும்
பிழையாம் பிறப்பையென் றும்.
Vizaivennum viththu viLaikkumE yArkkum
pizaiyAm piRappaiyen Rum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam